பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 துடைத்து ஊன்றும் துரணாக நின்று அவர்களது வாழ்க்கைக்கு இனிமையளித்து உறுதியளிப்பதாயுள்ளது" என்று புறத்திரட்டு முன்னுரையில் உயர்திரு எஸ். வையா புரிப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்கள். டாக்டர் சுப. மாணிக்கம் பாட்டு என்றால் உணர்ச்சி துள்ள வேண்டும். கற்பனை செறிய வேண்டும், உவமை கலக்க வேண்டும். எதுகை மோனை இணைய வேண்டும். நயம் கனிய வேண்டும். நோக்கு இருக்க வேண்டும்" என்பர் இலக்கிய விளக்கத்தில் உயர்திரு டாக்டர் சுப. மாணிக்கம் அவர்கள். பிறர் கருத்து o புலவர்தம் நாவித்தகத்து நலம் அவரியற்றிய பாவினைச் சேர்ந்து உலகமெல்லாம் பரவுகின்றதாம். நாற்பா நடைதெரிந்த நன்னூற் பெரும்புலவர் நூற்பால் நயந்த நுழைபொருளைப் - பாச்சார்த்தி பாவித்துப் பார்மேல் நடத்தப் படருமே நாவித் தகத்து நலம் (யாப்பருங்கல விருத்தி - கழகம் - பக். 446) புலவர் நாவினுள் கலந்துறை கலைமகள் அப்புலவர் இயற்றும் கவிதையைப் பற்றுக் கோடாகக் கொண்டு உலகமெல்லாம் வணங்கப் புறப்படுகின்றாள். புலந்துறை போகிய புலவர் நாவினுள் கலந்துறை கலைமகள் கவிதை கந்தமா நிலந்தொழப் புறப்படும் நிலையள் ஆருமி லங்கிழை பெருமையை எண்ண வேண்டுமோ? (யாப்பருங்கல விருத்தி - கழகம், பக். 441). கவி தோன்றுவதற்குக் காரணம் உள்ளமாகிய கடலுள் நூல்களாகிய மலையை நாட்டிக் கேள்வியைக் கயிறாக இட்டு இகழ்ந்திராமல் கடைய அப்பொழுது கவிதையாகிய அமிழ்தம் தோன்று கின்றது. 14