பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளப் பரவையின் நூல்வரை நாட்டியொண் கேள்வி தாம்பா உள்ளப் படாமை இயையக் கடையின் இசைபெ ருக்கும் வள்ளற் குணநாவலர் வானோர் களைவள மைப்ப டுக்கும் வெள்ளக் கவிதை அமிழ்தமெல் லார்க்கும் வெளிப்ப டுமே (யா - விரு கழகம்) மேற்பாட்டு முன்னோர் இலக்கியங்கள் சான்றோ ரிடத்தே கேட்ட கேள்விகள் என்னும் இவற்றால் முயலக் கவி தோன்றும் என்கிறது. நிறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர் ஈன்றசெங் கவி (கல்லாடம்) நிறைந்த கவியைப் பெற்ற புலவர் இயற்றிய செம்மை யான கவி, என்று கல்லாடம் கூறுவதை நோக்கினால் நிறைந்த கல்வி கவி தோன்றுவதற்குக் காரணம் என்பது புலனாகிறது. இவ்வாறன்றிக் "கவிஞனிடத்திலே ஒரு ஆவேச உணர்ச்சி தோன்றுகிறது; அப்பொழுது அவன் கவி பாடுகிறான்; அந்த ஆவேச உணர்ச்சி இல்லாத பொழுது கவி தோன்றுவதில்லை" என்று மேனாட்டிறிஞர் சிலர் கருதுகின்றனர். அக்கருத்திற்கிசைய உமாபதிசிவம் என்னும் பெரியார் தாம் இயற்றிய சிவப்பிரகாசம் என்னும் நூலுள், விளம்பியநூல் அவையிரண்டும் விரும்பி நோக்கிக் கருத்திலுறை திருவருளும் இறைவன் நூலும் கலந்து பொது உண்மையெனக் கருதி யானும் அருத்திமிக உரைப்பன்வளர் விருத்தம் நூறு என்பர், தம் பரம்பரையில் முன்னோர் நூலாகிய சிவஞான போதம், சிவஞான சித்தி என்னும் இரண்டு நூல்களையும் விரும்பி நோக்கி, என் கருத்தில் உரை திருவருளையும் சிவாகமங்களையும் கலந்து சிவப்பிரகாசம் என்னும் பெய