பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 ருடைய நூலை இயற்றுகின்றேன் என்கின்றனர். உமாபதி சிவம் கவி தோன்றுவதற்குக் கூறிய காரணம் நான்கில் திருவருளும் ஒன்றாகும். o பத்தி உணர்ச்சியிற் கவிபாடிய மாணிக்க வாசகர் என்பவரும் இறைவன் திருவருளால் செம்புலச் செல்வர் ஆயினர் என்று திருக்கோவையார் உரைப்பாயிரம் உரைக்கும் செய்தியாம். தில்லை மூதூர்ப் பொதுவினிற் றோன்றி எல்லையி லானந்த நடம்புரிகின்ற பரம காரணம் திருவரு ளதனால் திருவாத ஆர்மகிழ் சிவமறை முனிவர் ஐம்பொறி கையிகந்த தறிவாய் அறியாச் செம்புலச் செல்வர் ஆயினர் பாரதியார், உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும்; வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கம் மேவு மாயின் பல்ளத்தின் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வர் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார் என்று கூறுகிறார். முறையாக இலக்கிய இலக்கணப் பயிற்சி பெற்றுச் சான்றோருடன் பழகிக் கேள்வி அறிவு பெறுவதும், தெய்வத் திருவருள் விளங்கப் பெறுவதும், உள்ளத்தில் ஒளி தோன்றப் பெறுவதும், ஆகிய இவையெல்லாம் கவி தோன்றுவதற்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன, என்பதைக் கண்டோம். கவிவகை இனிக் கவியின் வகைகளைப் பார்ப்போம். யாப் பருங்கல விருத்தி ஆசிரியர் கவி என்பார் நான்கு வகைப் படும். முதலாமவன் ஆசு கவி அவன் கொடுத்த