பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 206 பொருளும் தொகுத்த குழலும் அடுத்த தொடையும் வழுவாமல் கருத்து (ஆசு - விரைந்து) பாடுவர்; இவனுக்குக் கடுங்கவி என்றும் பெயர் உண்டு. o H இரண்டாமவன் மதுர கவி இவன் சொற் செல்வமும் பொருட்பெருமையும் உடைத்தாய்த் தொடையும் தொடை விகற்பமும் செறிந்து உருவகம் முதலிய அணிகளை உட்கொண்டு ஒசைப் பொலிவு உடைத்தாய், உய்த்துணரும் புலவர்கட்குச் செய்யுள் ஓசை கடல் அமிழ்தம் போல இன்பம் பயப்பதாய்ப் பாடுபவன்; இவனுக்கு இன்பம் பயப்பப் பாடுவதால் இன்கவி என்றும் பெயர் உண்டு. மூன்றாமவன் சித்திர கவி; மாலைமாற்று முதலிய அருங்கவிகளைப் பாடும் இயல்பினன். இவனுக்கு அருங்கவி என்றும் பெயர் உண்டு. நான்காமவன் வித்தார கவி; இவன் மும்மணிக் கோவையும் பன்மணிமாலையும் மறமும் கலிவெண்பாவும் மடலூர்ச்சியும் முதலாகிய நெடும்பாட்டுக் கோவையும் பாசண்டமும் கூத்தும் வித்தகமும் கதை முதலாகிய செய்யுளும் இயல் இசை நாடகங்களோடும் கலை நூல்க ளோடும் பொருந்தப்பாடும் பெருங்கவியாவான். இவனுக்கு அகலக்கவி. முத்தமிழ்க் கவி என்றும் பெயர் உண்டு" என்பர். மேலே நால்வகைக் கவிஞர்க்குக் கூறிய இலக் கனத்திலேயே நால்வகைக் கவிகட்கும் (பாடல்கட்கும்) இலக்கணம் அமைந்திருத்தளின் அவர் அவர் இலக்கணமே இங்கு கூறப்பட்டுள்ளன. தனிப்பாடலும் தொடர்நிலைப் பாடல்களும் மேலே கூறிய நால்வகைக் கவிகளுள் ஆசு மதுரம் சித்திரம் என்பன தனிப்பாடல்களாம். யாப்பருங்கல விருத்தி ஆசிரியர் ஒருபொருட்பாட்டு என்ற தனிப்பாடல் வகையைக் குறிப்பிட்டு அது ஒரு பாட்டிலே ஒன்றனையே வருணித்துப் பாடுவது என்பர். (கழகப்பதிப்பு யா-வி- பக்.542,543) வித்தார கவி அல்லது அகலக்கவி என்பது தொடர்நிலைச் செய்யுள்களாம்.