பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O7 சொற்றொடர்நிலை பொருட்டொடர்நிலைச் செய்யுள் களைக் காப்பியம் என்று வழங்கலாம் என்று கூறுகிறார். அடியார்க்கு நல்லார் (சிலப்-பதி8) எல்லாப் பாட்டுகளையும் தண்டியாசிரியர் முத்தகம் என்றும் குளகம் என்றும் தொகைநிலை என்றும் தொடர்நிலை என்றும் நான்காகப் பிரிக்கலாம் என்பர். தண்டியாசிரியர்க்கு முற்பட்ட அணியியலார் தனிநிலைச் செய்யுள் தொடர்நிலைச் செய்யுள் அடிபல தொடுத்த தனிப்பாச் செய்யுள் உரையிடை மிடைந்த பாட்டுடைச் செய்யுள் இடைநுவல் மரபின் செய்யுள் சாதி (இனம்)ச் செய்யுள் என அறுவகைப்படுத்திக் கூறுவர். (யா -வி-பக் 566) கவி இலக்கு அல்லது காவிய இலக்கு பாடல்களில் நல்லொழுக்க நெறி அல்லாதவற்றைப் பாடு பொருளாக அமைத்துப் பாடக்கூடாதென்பது தொல் காப்பியர் கருத்தாகும். அறக்கழி வுடையன பொருட்பயன் வரினே வழக்கென வழங்கலும் பழித்த தென்ப (தொல்-பொருளியில்-23) ஒருவன் பிறன்மனைவி ஒருத்தியைக் களவில் நால்வகைப் புணர்ச்சியாலும் புணர்கிறான் என்று அகப்பொருள் பற்றிப் பாடுவதும், களவு முதலான தீய தொழில்களை இன்னின்ன வாறு செய்து இன்னார் பொருளிட்டி வாழ்ந்தார் என்று புறப்பொருள் பற்றிப் பாடுவதும் அறக்கழிவுடையனவாகும். மாண்பற்ற பொருள் பாடற் பொருளாக இருத்தல் கூடாதென்று அறிஞர் கருதுகின்றனர். கற்பனைப் புலவராகிய சிவப்பிரகாசர் தாருகன் என்ற அசுரன் போரில் முடியிழந்து அழகொழிந்த செய்தியைக் கூறவரும் பொழுது, பொறையறு தவமும், மாட்சிப் பொருளறு கவியும், ஆன்ற மறையறும் உரையும், செரிய மகவறும் வாழ்வும் நீதி இறையறும் உலகும் அன்போ டியைபறும் அறமும் போல