பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 முறையறும் அவுணர் கோமான் முடியிழந் தழகொ ழிந்தான் (திருக்கூவப்புராணம்) மாண்பற்ற பொருளைப் பெற்றால் கவி அழகழியும் என்கின்றார். காவியமாகிய பெருநூலின் இலக்கு மக்களை இல்லற நெறியிலோ அல்லது துறவற நெறியிலோ புகுத்துவதாக இருத்தல் வேண்டும் என்பதை, ஈதற்குச் செய்க பொருளை அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லை.இம் மூன்றும் இருளுலகம் சேராத வாறு என்னும் பாட்டில் அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை என்னும் சொற்றொடரால் திரிகடும் என்னும் நூல் கூறுகின்றது. கவிக்குற்றம் புலவர்கட்கு வடமொழியில் தோஷஜ்ஞன் என்றொரு பெயருண்டு. இப்பெயரின் பொருள் குற்றங்களை அறிபவன் என்பதாகும். தமிழில் ஆசிரியன் என்றொரு பெயர் உண்டு. இது குற்றங்களைப் போக்குபவன் என்ற பொருளுடையது. புலவர்தம் வேலையாவது எழுத்துச் சொல் பொருள் முதலானவற்றில் குற்றம் நிகழாமல் பாதுகாவலர் ஆக இருப்பதாகும். அதனால் புலவரை மொழிக்காவலர் என்றும் கூறுவதுண்டு. பாடப்படும் கவியில் குற்றம் இருத்தல் கூடாது. குற்றம் இல்லாமல் அமைந்த கவியே சிறந்த கவியாகும் என்பது அறிஞர்தம் கருத்தாகும். குற்றங்களைப் பொதுவாக எழுத்துக்குற்றம் சொற்குற்றம் பொருட்குற்றம் என்று கூறிவிடலாம். யாப்பருங்கல விருத்தியுரை ஆசிரியர் இன்னின்ன குற்றங்கள் கவியில் இருக்கக் கூடாதென்று விளக்கமாகக் கூறுகின்றார்.