பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 பிரிபொருள் தொடர்மொழியும் முரண்மொழியும் ஒருபொருள்மொழியும் ஐயமொழியும் சொல்லிலக்கண வழுவும் என்னும் சொற்குற்றமும், முறை பிறழ வைத்தலாகிய வைப்புமுறைக் குற்றம் யாப்பில் வழுவும் நடை வழுவும் பொருளில் வழுவாகிய பொருள் : வழுவும் புணர்ப்பு வழுவாகிய எழுத்துக்குற்றமும் கலையொடு, காலத்தொடு, உலகியலொடு, இடத்தொடு, மேற்கோளொடு, ஏதுவொடு, எழுத்துறையொடு, நூலொடு, மாறுபடும் மாறுபாட்டுக் குற்றமும், வெளிப்படக் கூறாமல் உய்த்துணர்வாகவே கூறுதலும் பலவாறு பொருள்படும் ஒட்டுப் பிரிமொழியாற் கூறுதலும் பிறிதுபடுமொழியும், பிசியும், உத்திமறுதலையும் ஆகிய இவையும் இடக்கர் இசையவும், இடக்கர்ப் பொரு ளவும் இடக்கர்ப்பட வரூஉம் சந்தி இசையவும் இன்னா இசையவும் எனக் கூறும் இவற்றுடன் மேற்கூறியவை யெல்லாம் சேர்ந்து இருபத்தேழு குற்றங்கள் கவியில் வரத்தகாதவையாகும். ஒருபுலவன் இக்குற்றங்கள் நிகழாமற் பாடினால் அப்பாட்டு சிறப்பாயிருக்கும். அவ்வாறின்றி மேற்கூறிய குற்றங்கள் விரவப் பாடின், அடங்காப் புதல்வர்ப் பயந்த பரத்தையின் புறஞ்சொற் பெறுஉம் புலவ ரானே என்று கூறுவர். சிறந்த கவி எத்தகைய கவி சிறந்ததாகக் கருதப்படும் எனின், கற்பவர் தம் மனத்தைக் கவருகின்ற பொருள் அமைய, பலமுறை பாடினாலும் அவ்வப்பொழுதும் கேட்க விரும்புகின்ற ஒசைப் பொலிவும், சொற்களெல்லாம் இனிமையைத் தருவ தாய் விளங்கி உணர்த்தும் பொருளைத் தெளிவாக உணர்த் தும் தகுதியும் புதிய புதிய உவமைகளும் கற்பனைகளும் அமைய நல்ல மெய்ப்பாடும் தோன்றிப் பாடல்களைப் பாடினால் அப்பாட்டு சிறந்த பாட்டாகக் கருதப்படும் என்க. கற்பார் மனத்தை இழுக்கின்ற கருத்தும் கேட்க மிகவிரும்பும் சொற்பால் அமைந்த நல்லிசையும் சொற்கள் இனிதாய்த் தெளிவாகப்