பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 12 உணர்த்தும் முறை செய்யுள் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிர உரையுள் செய்யுளாவ்து,"பாட்டுரை நூலே (செய்யுளியல்-78) என்னும் செய்யுளியற் சூத்திரத்தாற் கூறிய ஏழு நிலமும், அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப (செய்யுளியல்-102) என்னும் நூற்பா விதியின்படி அறம் முதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது என்பர். நன்னூலாசிரியர் பலவகைத் தாதுப்பொருளால் உயிர்க்கு இடமாகப் படைக்கப்பட்ட உடம்பினைப் போல, பல சொல்லால், பொருளுக்கு இடனாக, உணர்வினின் வல்லவர் அணிபெறச் செய்வன செய்யுள் என்பர். இவர் செய்யுள் உணர்த்துபவனை உணர்வினில் வல்லோன் என்று கூறி, அவன் சொற்களைக் கருவியாக எடுத்துக் கொண்டு, பொருளுக்கு இடம் ஆகுமாறு, அணிபெறச் செய் கின்றான் என்பர். எனவே செய்யுளை ஆக்குவதற்கு உணர்வினில் வல்லவன் நிமித்த காரணன் ஆகின்றான். அவனுடைய உணர்ச்சி முதலியவை துணைக்காரணம் ஆகின்றன. பலவகைச் சொல் முதற்காரணம் ஆகும். இக்காரனங்களால் இயன்றசெய்யுள் உடம்பு அல்லது சட்டகம் என்று கூறப்படும். பாடுதற்கு எடுத்துக்கொண்ட பொருள் உயிராகும். புலவன் பலவகைச் சொல்லுள் பொருளை வைத்து அணிபெறச் செய்வது உணர்த்தும் முறை ஆகும். குமரகுருபரரும் செய்யுளை உடம்பென்று கூறியதை அவர் பாட்டால் அறியலாம். கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய்