பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு (இவர் - தமிழ்ப்புலவர், செய்யும் உடம்பு - செய்யுள்) செய்யுள் என்பது ஒரு மானிடன் வீரசோழிய நூலார் சொற்களே உடம்பாகவும், பொருளை உயிராகவும் செய்யுளில் உள்ள வண்ணமே உடம்பின் நிறமாகவும், செய்யுளின் நடையே (நெறி) செலவாகவும் அமைந்த செய்யுளாகிய மானிடன்; அவன் அணிந்து கொள்ள தன்மை முதலான அணிகளைக் கூறுவேன் என்று அலங்காரப் படலத்தின் முகப்பில் கூறுகிறார். இதனால், செய்யுள் என்னும் மானிடனுக்குச் சொற்கள் உடல்; உணர்த்தும் பொருள் உயிர் ஒசை அல்லது வண்ணம் உடல் நிறம் அப்பாட்டின் நெறியே அம் மானிடனின்இயக்கம் என்று கருத வைக்கிறார். அவனுடைய நல்ல உறுப்பும் பழித்த உறுப்பும் மேலும் அவர், அச்செய்யுள்மனிதனுக்கு இது இது நல்ல உறுப்பென்றும், இது இது பழித்த உறுப்பென்றும் கூறுகின்றார். நாடக வழக்கு உலகியல் வழக்கொடு பொருந்தி, வடமொழி எழுத்தினை நீக்கி, உணர்பவர்க்கு இனிமையைத் தந்து, உயர்ந்தோரால் தம் செய்யுளுள் எடுத்தாளப்பட்டு, முறைப்படி உண்மைப் பொருளுணர்ச்சியைத் தருகின்ற சொற்களே நல்ல உறுப்பாம். அவ்வாறின்றி மாறுபட்ட வழக்கொடு கூடி, உணர்பவர்க்கு இன்பம் செய்தலின்றி, வடமொழி எழுத்துக்களோடு கூடி, இது சான்றோர் செய்யுளுள் பயிலாதன என்றுகூறப்பட்டுத், திரிபுப் பொருளையும், ஐயப்பொருளையும் தருகின்ற சொற்க ளெல்லாம் பழித்த உறுப்பாம். அவனுடைய சிறப்பான உயிரும், சிறப்பில்லாத உயிரும் மற்றும் அவர், அச்செய்யுள் மனிதனுக்குச் சிறப்பான உயிர் இன்னது, சிறப்பில்லாத உயிர் இன்னது என்பதையும் அடுத்துக் கூறுகின்றார். கேட்பவர்க்கு இன்பத்தினைத் தரு வதும், அவர் கருதும் உயர்ந்த பொருளாகக் காட்சி