பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 யளிப்பதும், குற்றங்கள் இல்லாததும் ஆகிய பொருள் அமைவே செய்யுள் என்னும் மனிதனுக்குச் சிறப்புயிராம், கேட்பவர்க்கு வெறுப்பைத் தருவதும் தெளிவாக விளங்காமையும் குற்றம் நிறைந்ததும் ஆகிய பொருள் அமைவே அவனுக்குக் குற்றமான உயிராகும் என்பர். அணிபெற உணர்த்துலும் உயிராகும் மேற்கூறியவற்றால், செய்யுள் என்னும் மனிதனுக்குப் பொருளே உயிரென்று கருதப்படுகிறது. அப்பொருள் என்னும் உயிரையே அலங்காரமாகச் (அணிபெறச் செய்வன) செய்க என்று வீரசோழியம் (147) கூறுவதால் பொருளை உணர்த்தும் முறையும் பொருளை உணர்த்தும் காரணத்தால் உயிரென்றே கூறப்படுகிறது. தன்மையும் கற்பனையும் என்று இரு வகைத்து அணியினைத் தன்மை என்றும், கற்பனை என்றும் இரண்டு கூறாக வகுத்துக் கொள்வோம். ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே கூறினால் அது தன்மை நவிற்சி என்னும் அணி முறையாகும். அவ்வாறின்றி, எடுத்துக் கொண்ட பொருளுக்கு உவமை கூறுதலும், உவமையும் பொருளும் வேற்றுமை ஒழித்து ஒன்றென உருவகித்துக் கூறுதலும், இன்னும் வெவ்வேறு வகையாகக் கூறுதலும் ஆகிய இவை எல்லாம் கற்பனையின் பாற்படும். கற்பனையில் மகிழ்ச்சி உலகம் கற்பனையில் * ՅՆՈ ՅՈI காண்கின்றது. இவ்வுலகத்துள் சில குழந்தைகள் கூட கற்பனை செய்து களிக்கிறது. அது ஏனைய குழந்தைகளுடன் கூடி விளையாட்டு நிகழ்த்தும்பொழுது, தெருவில் உள்ள கற்கள் கிளிஞ்சல்கள் முதலியவற்றைப் பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு, அதற்குக் காசுகள் என்று பெயர் சூட்டி, அக்காசு என்ற நினைவுடனே கொடுக்கல் வாங்கல் செய்து மகிழ்வடையக் காண்கின்றோம். இவ்வாறு கற்பனை செய்து