பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 மகிழ்வடையுமாறு அக்குழந்தைகட்குக் கற்பித்தவர் யார்? கற்பனையில் மகிழ்ச்சி பெறுதல் எல்லோருக்கும், அதிலும் கற்றுவல்ல புலவனுக்கு இயல்பாக உள்ளது. 1. பாப்பா செய்யும் காரியங்கள் பலபே ருக்கும் வியப்பாகும் கேட்பா ரற்றுக் கிடக்கின்ற கிளிஞ்சிலைக் கல்லைப் பொறுக்கிக்கொள்ளும் 2. காசுக ளென்றே கருதிக் கொள்ளும் கருத்தாய்க் கொடுத்து வாங்கிக் கொள்ளும் தூசினைப் போலே சிலர்கூறித் தொட்டால் அவரைக் கடிந்து கொள்ளும் 3. ஒன்றை ஒன்றாய்க் கருதிடுதல் உயர்ந்த புலவன் கருத்தென்பர் என்றும் அந்தக் கருத்தினையே இயற்றிக் களிக்கும் குழந்தையினம் கற்பனை என்பது என்ன? " ஆரோபம் அத்தியாசம் கற்பனை ஆவதெல்லாம் ஒரோர் வத்துவினை வேறே ஒரோர் வத்துவென ஒர்தல்' என்று கற்பனைக்கு விளக்கம் கூறுகிறது கைவல்ய நவநீதம் என்னும் வேதாந்த நூல். ஆரோபம், அத்தியாசம் என்பன வடமொழிச் சொல், கற்பனை என்பது தமிழ்ச்சொல் இம்மூன்றும் கற்பனையைக் குறிக்கும் சொல்லாகும். ஒரு பொருளை மற்றொரு பொரு ளாகக் கருதும் உணர்ச்சியே கற்பனை என்று கூறப்படுகிறது. ஒரு வெண்கல் துண்டினைப் பார்த்துப் பனிக்கட்டி என்று கருதினால், இது உள்ளதை உள்ளவாறு அறியும் அறிவு நிலைக்குச் சிறிதும் பொருந்தாது. அவ்வாறு அறிபவனை அறிவுத்திரிபுடையோன் என்று கருதுவோம். ஆனால், ஒரு சிறுபெண் குழந்தையொன்று விளையாடிக் கொண் டிருக்கிறது. அதை ஒருவர் கண்டு என்ன செய்கிறாய் என்று வினாவுகிறார். அவரும் குழந்தையும் பேசிக்கொள்ளும் உரையாடலைக் கீழே காண்க.