பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 1. சின்ன பாப்பு சின்ன தங்கம் என்ன செய்கிறே? சீக்கி ரமாய்ப் பாலைக் காய்ச்ச அடுப்பு மூட்டுறேன் 2. பாலைக் காய்ச்சிப் பசியும் தீரக் குடிக்கப் போறியா? பானையிலே தயிரைத் தோய்த்துக் கடையப் போறியா? 3. குடிப்பு தற்கும் கடைவ தற்கும் பாலைக் காய்ச்சலே குழந்தைக் காகப் பாலைக் காய்ச்சிக் கொடுக்கப் போகிறேன். 4. யார்கு ழந்தை? எங்கி ருக்குது? அதனைச் சொல்லனும்? யாரும் அதனை வளர்ப்ப தற்கே எண்ண வில் லையா? 5. தாயும் இல்லை! தந்தை இல்லை! மிகவி ரங்கனும் தச்சன் செய்து விற்று விட்டான் தயவும் இன்றியே 6. காசு கொடுத்து ஆசை யாக நானும் வாங்கினேன் கவலை கொண்டு அன்று முதல் நான் வளர்க்கிறேன். மேற்கண்ட பாடலில், அச்சிறு குழந்தை மரப்பாவை ஒன்றினை குழந்தையாகக் கற்பனை செய்துகொண்டு, குழந்தையைத் தாயர் எவ்வெவ்வாறு வளர்ப்பார்களோ அது போன்ற செயலைச் செய்து, விளையாடிப் பெரு மகிழ்ச்சி அடைகின்றது. இக்குழந்தை தெருவில் மரப்பாவ்ை விற்றுக்கொண்டு போன தச்சனைக் கண்டு அழைத்து, தனக்கு விருப்பமான மரப்பாவை ஒன்றைப் பார்த்து ஆராய்ந்து எடுத்துக் கொண்டது. இப்பொழுது அதன் உள்ளத்தில் மரப்பாவை என்று கருதும் உண்மை அறிவே, இருக்கக் காண்கின்றோம். ஆனால் அக்குழந்தைக்கு அம்