பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 மரப்பாவையை வைத்து விளையாடும்பொழுது அந்த அறிவில்லை. அப்பொழுது விளையாடுவதற்குரிய, விளையாட்டு இன்பமாய் நிகழ்வதற்குரிய வேறொரு விதமான உணர்ச்சியைக் கையாள்கிறது. அதுபோலப் புலவனும் இலக்கணம் முதலான நூல்களைக் கற்கும்பொழுதும் படைக்கும்பொழுதும் உண்மை அறிவில் இயங்குகின்றான். அதைவிட்டு, இன்புறுத்தும் இலக்கியத்தைக் கற்கும் பொழுதும், படைக்கும் பொழுதும், கற்பனை உணர்வில் முழுகுகின்றான். அவன் எவ்வளவுக்கு எவ்வளவு கற்பனை உணர்வில் நினைக்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவன் படைக்கும் இலக்கியம் இனிப்பைத் தருவதாக அமைகிறது. புனைந்துரை கற்பனைக்குப் புனைந்துரை என்றபெயரும் உண்டு. யாப்பருங்கல விருத்தி ஆசிரியர், (கழகப்பதிப்பு - 424) 'புனைந்துரை இரு திறத்தன; பெரியதனைச் சுருக்கிச் சொல்லுதலும், சிறியதனைப் பெருக்கிச் சொல்லுதலுமென" என்பர். தொல்காப்பியரும் அக்கருத்தினை, பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக் குறிப்பின் வரூஉம் நெறிப்பா டுடைய (உவமம் -10) என்னும் நூற்பாவால் புனைந்துரையாகிய பெருமையும் சிறுமையும் சிறப்பின் வரூஉம் வழக்கப்பாட்டினையுடைய என்று கூறுவர். அந்நூற்பாவுரையில் இளம்பூரணர் வழக்கின்கட்பயின்று வாராத இறப்ப உயர்தலும் இறப்ப இழிதலும் ஆகா என்பர். அவ்விரண்டும் சிறப்பொடு கூடி வரல் வேண்டும் என்பர். & G)J GU)LD தொல்காப்பியர் காலத்திலே உவமை எடுத்துக் கொண்டதினைப் பொருளைத் தெளிவு பெற உணர்த்து வதற்காகவே எழுந்தது.அவர், உள்ளுறை உவமம் ஏனைஉவம மெனத் தள்ளா தாகும் திணைபுணர் வகையே (அகத்திணையியல் - 49)