பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 என்றே கூறியுள்ளார். அந்நூற்பாவுரையில் உள்ளுறைக்கண் வரும் உவமமும், ஒழிந்த உவமமும் என இருவகையாலும் தினை உணரும் வகை (திணைப்பொருளை உணரும் வகை) தப்பாதாகும் என்பர். தொல்காப்பியர் உவமை அணி குறித்து வரும் என்று எங்கும் கூறவில்லை. தருக்க நூலார் உவமையை ஒர் அளவையாகக் கூறி, அது ஒப்புமை உணர்வால் பொருளைப் புலப்படுத்த வரும் என்பர். இளம்பூரணர் உவமையியல் தொடக்கத்தே, உவமை கூறுவதால் பயன் என்னை என்று வினாவிக்கொண்டு, புலன் அல்லாதன புலனாதலும், அலங்காரமாகிக் கேட் டார்க்கு இன்பம் பயத்தலும் பயனாமென்பர். பிற்காலத்து அணியிலக்கண நூலாரெல்லாம் உவமையை அலங்காரம் கருதியே கூறுகின்றனர். (அலங்காரம், அலம் கிருதம்: அலங்காரம் அலங்கிருதம் என்னும் இரண்டிற்கும் அழகினைச் செய்வது என்றே பொருள்) உவமை என்னும் சொல் 'உபமானம்' என்னும் வடசொல் உவமை எனத் திரிந்தது என்பர் வடமொழியறிவுடையோர். வடமொழி அலங்கார நூலார் உவமையை உபமானம் என்றும், பொருளை உபமேயம் என்று வழங்குவர். உபமானம் என்றால் பொருள் என்ன? உப என்றால் அண்மை, பிரதானமில்லாதது என்று பொருள் கூறுவர். ஒரு பொருளையும் மற்றொரு பொருளையும் அண்மையில் நிறுத்தி, ஒப்புக் கூறுவதற்குப் பொருந்தி வருவது உபமானம் என்பர். அந்த உபமானத்தால் உணர்த்தப்படுவது உபமேயம் என்பர். அந்த உபமானம் என்னும் சொல்லையே உவமானம், உவமை என்று திரித்துக் கொண்டனர் என்பர். இந்த இடத்தில் ஒரு வினா தோன்றுகின்றது. என்னவெனில்? தொல்காப்பியர் உபமானத்தை உவமை என்கின்றனர்; உபமேயத்தைப் பொருள் என்கின்றனர். உபமானம் என்னும் உவ சொல்லை உவமை என்று திரித்து எடுத்துக் கொண்டாராயின் உபமேயம் என்னும் சொல்லையும் உவமேயம் என்று திரித்து வழங்க வேண்டும். எங்கும்