பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 அவர் அவ்வாறு வழங்கியதாகத் தெரியவில்லை. அவர் உபமேயத்தைப் பொருள் என்றே கூறுகின்றார். உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் (உவம -6) பொருளே உவமஞ் செய்தனர் மொழியினும் (உவம-9) சுட்டிக் கூற உவமம் ஆயின் பொருளெதிர் புணர்த்து (உவம-7) என்னும் நூற்பாக்களிற் காண்க. அவ்வாறாயின், உவமை என்ற சொல் எதனடியாகப் பிறந்திருக்கும் என்று வினாவின், உவ என்னும் சுட்டிடைச் சொல் அடியாகப் பிறந்தது. உவக்காணனெங் காதலர் செல்வார் இவக்காணென் மேனி பசப்பூர் வது என்னும் திருக்குறளை நோக்குக, உவக் காண் - உங்கே பார். எம் காதலர் செல்வார் - எம் காதலர் எம்மைப் பிரிந்து செல்வாராயினர். இவக்காண் - இங்கே பார். எம்மேனி பசப்பூர்வது. மேற்கண்ட குறளில் உவ, இவ என்ற சுட்டுச் சொல்லை நோக்குக. அவ்விரண்டு சொல்லில், உவ' என்ற சுட்டுச் சொல்லின் அடியாக உவமை என்ற சொல் பிறந்தது. உவமை என்பது, ஒரு உயர்ந்த பொருளை எடுத்து நிறுத்திக்கொண்டு, அதன் பின் தான் கூறக்கருதிய பொருளைக் கூறி, அப்பொருளிலே உள்ள இன்னதன்மை, இப்பொருளிலே உள்ள இன்ன தன்மையோடு ஒப்பா யுள்ளதென, அன்ன, போல முதலான சொற்களால் சுட்டிக் கூறுவதாகலின், அது உவ என்னும் சொல்லினடியாகப் பிறந்த சுட்டுச் சொல்லால் உண்டாகிய உவமை என்னும் சொல்லாற் குறிக்கப்பட்ட தென்க. உவமையில் சுட்டிக் கூறும் வழக்கம் உண்டு என்பதை சுட்டிக் கூறா உவமம் ஆயின் (உவமவியல் -7) என்னும் நூற்பாவால் உணர்க. உவமையிலிருந்து தோன்றியவையே உருவகமும் பிற அணிகளுமாகும். எடுத்துக்கொண்ட பொருளைச் சொல் உணர்த்து கின்றது. உவமப் பொருளையும், உருகவப் பொருளையும்,