பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஏன் எனில்? தொல்காப்பியர் 1. பொருளதிகாரத்திலே அகத்தினை புறத்திணை என இரண்டு தினைப் பொருள் களைக் கூறினாலும் அவற்றைச் சரி சமமாகக் கூறாமல் காமத்திற்கே ஏற்றந்தந்து கூறுகிறார். 2. அகத்திணையை ஏழ் என்று கூறி, ஒவ்வொரு அகத்திணைக்கும் புறனாய் ஏழுபுறத்திணைகள் தோன்றின என்று தொல்காப்பியர் கூறுகிறார். இவர் கூறும் இயைபு முறையைக் கருதினால் அகத்திணைக்குள்ள முதன்மை புலனாகின்றது. 3. பாக்களை உறுப்பினைப் பெறாத பா, தரவு முதலிய உறுப்புக்களைப் பெற்றுவரும் பா என்று இரண்டாகப் பகுத்துக் கொண்டு, உறுப்பினைப் பெறாத பாவை எல்லாப் பொருட்கும் பொதுவாக நிறுத்திவிட்டு, உறுப்பினைப் பெற்றுவரும் கலிப்பா, பரிபாடல் இரண்டும் காமப் பொருளுக்கு உரியனவாகவே ஒதுகிறார். 4. நாடக வழக்கம் உலகியல் வழக்கம் என்னும் இரண்டினாற் கூறப்படும் புலனெறி வழக்கம் அகத்திணைக்கு வரும் என்று அகத்திணை இயலில் ஒதுகின்றார். 5 அகத்திணைப் பொருளைக் கூறுவதற்கு உள்ளுறை உவமமும் இறைச்சி முதலானவையும் வரும் என்று கூறுகிறார். 6. புறத்தினையை ஓரியலாகக் கூறிய தொல்காப்பியர், அகத்திணையை அவ்வாறு கூறிவிடாமல் அகத்திணை யியலில் பொதுவிலக்கணம் கூறி, அவற்றின் சிறப்பிலக் கனங்களை களவியல், கற்பியல் பொருளியல் என்னும் நான்கு இயல்களால் கூறுகின்றார். 7. செய்யுள் இலக்கணம் கூறும்பொழுது அகப்பொருள் பாடல்களுக்குரிய திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை என்பவனவற்றைக் கூறுகிறார். 8. மிகப் பழைய இலக்கியமாகிய எட்டுத்தொகை இலக்கியங்களில் அகத்திணைப் பாடல்களே மிகுதியாக உள்ளன. அஃதாவது சங்கப்பாடல்கள் 2381 ஆகும். இவற்றுள் அகத்தினைப் பாடல்கள் 1862, அதாவது முக்காற்பாகமாகும்.