பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 சங்ககாலப் புலவர் தொகை 473, அவருள் அகத்திணைப் பாடலைப் பாடினோர் 378. அதாவது முக்காற் பகுதிக்கு மேற்பட்டவர். 9. இறையனார் களவியல் உரை: "பொருளதிகாரம், வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம் என்று வந்தார். வர, அரசனும், புடைபடக் கவன்று, என்னை? எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறோமே எனின், இவை பெற்றும் பெற்றிலேம்" என்று கவலை கொண்ட பாண்டியனுக்கு அகப்பொருள், அகப்பொருளிலும் அகனைந்தினைப் பகுதி மட்டும் அடங்கிய இறையனார் களவியலன்றோ கிடைத்தது. இதனைக் கருதினால், இக்காலம் புறத்திணை நிகழ்ச்சியைச் சிறப்பாகக் கருத முடியாத காலமாக அன்றோ இருந்திருக்கிறது. 10. பரிபாடலில், நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது: காதற் காமம் காமத்திற் சிறந்தது விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி புலத்தலிற் சிறந்தது கற்பே. தள்ளாப் பொருளியல்பிற் றண்டமி ழாய்ந்திலார் கொள்ளாரிக் குன்றின் பயன் என்னும் பாட்டில் வேதப் பொருளைக் காட்டிலும் அகனைந்திணைக் காமம் சிறப்பிக்கப்பட்டிருத்தலையும் கருத வேண்டும். இவற்றையெல்லாம் கருதினால் தொல்காப்பியருக்கு முந்தின காலமும், அவருடைய காலமும், எட்டுத்தொகை இலக்கிய காலமும், இறையனார் களவியல் காலமும் காதற் காலம் ஆக வேண்டும். தமிழகத்தில் முற்படத் தோன்றியது காதல் நிலைக் காலமாம். இதனை அடுத்துப் பின்தோன்றியது வீர நிலைக் காலமாகும்.