பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தொல்காப்பியர் பாட்டினை மட்டும் செய்யுள் என்று கூறவில்லை. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் ஏழினையும் செய்யுள் என்று கூறுகிறார். இந்த ஏழையும் அடிவரையறை உள்ளதென்றும் அடி வரையறை இல்லாதனவென்றும் இரண்டு வகையாகப் பிரித்துக் கூறுகிறார் அவர் அடிவரையறையுடையன பாட்டாகும். பாட்டுக்களிற் சிறந்தவை முதன்மையாகக் கருதத்தக்கவை ஆசிரியப்பா வெண்பா என்னும் இரண்டு மாம். ஏனைய வஞ்சிப்பாவும் கலிப்பாவும் மருட்பாவும் பரிபாடலும் அவ்விரண்டினால் ஆக்கப்பட்டவையாம். வஞ்சிப்பா ஒழிந்த எல்லாப் பாக்களும் பெரும்பாலும் நாற்சீர் கொண்ட அடியால் வரும். வஞ்சிப்பா மட்டும் இருசீர் கொண்ட அடி, முச்சீர் கொண்ட அடிகளில் வரும். நாற்சீர் கொண்ட அடியிற்றான் தளையும் தொடையும் வரும. இத்தகைய அடியின் சிறப்பினைக் கொண்டது பாட்டு என்பர். நாற்சீர் கொண்ட அடியொன்றே நான்கு ஐந்து ஆறு என்னும் எழுத்தினைப் பெற்றுவரின் குறளடி என்றும், ஏழு, எட்டு ஒன்பது என்னும் எழுத்தினைப் பெற்றுவரின் சிந்தடி என்றும் பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு என்னும் எழுத்தினைப் பெற்றுவரின் அளவடி என்றும், பதினைந்து, பதினாறு, பதினேழு என்றும், எழுத்தளவைப் பெற்றுவரின் நெடிலடி என்றும், பதினெட்டு, பத்தொன்பது, இருபது என்றும் எழுத்தளவைப் பெறின் கழிநெடிலடி என்றும் பெயர் பெறும் என்பர் தொல்காப்பியர். அடிவரை யறையுடைய பாட்டினைத்தான் சிறந்ததொன்றாகக் கருதி மாத்திரை எழுத்து அசை சீர் முதலிய இலக்கணங் களையெல்லாம் கூறிச் செல்கின்றார். அடிவரையறை இல்லாதன அடிவரையறையில்லாத செய்யுள்கள் உரையும் நூலும் வாய்மொழியும் பிசியும் அங்கதமும் முதுசொல்லும் என ஆகும். இவ்வாறுள் உரையல்லாத நூல் சொற்சீரால் வருதலாலும் வாய்மொழியாகிய மந்திரமும் நிறை மொழி