பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 மாந்தரது உரைநடையாயிருத்தலாலும் பிசியும் அங்கதமும் முதுசொல்லும் ஒரு வகையான உரைநடையாதலாலும் இந்த ஆறினையும் உரைநடை என்றே கூறிவிடலாம். அங்ங்னமாயின் மேற்கூறிய எழுவகைச் செய்யுளையும் பாட்டு, உரை என்று இரு கூற்றுள் அடக்கிக் கொள்ளலாம். பாட்டும் உரையும் மறைமலை அடிகளார் தாம் இயற்றிய பட்டினப்பாலை ஆராய்ச்சியில் "பாட்டென்பது அறிவு நிலை, உணர்வு நிலை என்னும் இரண்டு நிலைகளைத் தந்து மிகுந்த பயனைத் தருவதாகும். உரையும் அறிவுநிலை உணர்வு நிலையைத் தருகின்றது. அவ்விரண்டுள் பாட்டிற்கு மட்டும் ஏற்றம் என்னவெனின்? பால் கறந்த மாத்திரையே உண்பார்க்கு அது சுவை பயக்குமாயினும் பாலினை வற்றக் காய்ச்சி சருக்கரை முதலியன உடன் சேர்த்து உண்ணின் சிறந்த சுவையைப் பயக்கும்; அதுபோல உரையினை வழுவில்லாமற் செய்து அவ்வுரையால் தொடைநலம்பட, அணி தோன்ற, நல்ல, ஓசைபடப் பொருளினை அமைத்துச் செய்யுள் செய்யின் அப்பாட்டு மிக்க சுவையை விளைக்கும் என்க" என்பர். பாட்டு முந்தியது உலகியல் நடை முறையில் உரைநடை முன்னும் பாட்டு பின்னும் தோன்றக் காண்கின்றோம். ஆனால் தொல்காப்பியர் பாட்டுரை என்று பாட்டை முன்னும் உரைநடையைப் பின்னுமாகவே கூறுகிறார். வீரசோழிய நூலாரும் பத்தியம் கத்தியம் என்று பத்தியமாகிய பாட்டை முன் ஒதியுள்ளார். ப. ஆலால சுந்தரனார் எழுதிய இயற்றமிழ் என்னும் கட்டுரைத் தொகுப்பில் மறுமலர்ச்சி - உரைநடை என்னும் கட்டுரையில் பின்வருமாறு கூறுவர். "மக்கள் பேச்சுமொழியைக் கற்றுக் கொள்வதற்கு முன் தம் உணர்ச்சிகளைப் பாட்டுக்களின் மூலம் தெரிவித்தனர் என்பர் ஜெஸ்பர்சன் என்ற மேனாட்டு ஆசிரியர். இலக்கிய வரலாற்றில் உரைநடை நூல்களுக்கு முன்னர்ச்