பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 செய்யுள் நூல்களே இடம் பெற்றன என்பர் எமர்சன் என்ற ஆசிரியர். இக்கருத்துத் தமிழ்மொழிக்கும் பொருந்துவதாகும். தமிழர் இலக்கணம் இலக்கியம் சோதிடம் மருத்துவம் முதலிய எல்லா நூல்களையும் செய்யுள் களிலேயே இயற்றி வந்தனர்" என்பனவற்றைக் கருதின் தொல்காப்பியர் பாட்டினை முன்னே வைத்து ஒதினமைக்குக் காரணம் புலப்படும். பாட்டு அல்லது கவி குமரகுருபரர் கல்வி என்னும் கற்புடைய நங்கையிடத்தே பிறந்த செல்வப் புதல்வன் கவி என்பர். கல்வி என்கின்ற அழகான பெண் கவிதை என்னும் குழந்தையை ஈன்றாள். அக்கவிதையாகிய குழந்தை சிறுநடையாக (குறுகுறு நடத்தல் விளாந்து நடத்தல் தளர்நடை போடல் தவழ்ந்து நடத்தல் முதலிய பலவகை நடையாலும் தன் உடம்பின் அழகாலும் இனிப்பான பொருளைக் கூறுவதாலும் கேட்பவர்தம் சோர்வினைப் போக்கும் இசையாலும் உலகிற்கு மகிழ்ச்சியைத் தந்து விளையாடித் திரியும் என்று கூறுகின் றார். இங்கே குழந்தைகளுக்குக் கூறிய நடை உடம்பின் வனப்பு கூறும் பொருள் இன்னிசை என்னும் இவை எல்லாம் பாட்டிற்கும் உண்டு. கம்பர் புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற்றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிய ளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் சார்ந்து சான்றோர் கவியெனக் கிடந்த கோதா விரியினை வீரர் கண்டார் என்னும் பாட்டில் கோதாவிரியாற்றுக்குச் சங்கச் சான்றோருடைய கவியை உவமையிட்டுக் கூறுகிறார். சான்றோர் கவி சொல்லுலகிற்கு அழகாயிருப்பது சிறந்த பொருளைத் தருவது; பொருள் புலப்பாட்டை உடையது அடங்கிய அகத்திணைத் துறைகளைப் பெற்றிருப்பது: குறிஞ்சி முதலிய ஐந்தினை நடையையுடையது; ஒளி பெறப் பொருள் தெளிவுடையது; குளிர்ந்த பண்புடையது;