பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 களவு கற்பென்றும் கைகோளை உடையது என்று கூறு கின்றார். இதனால் சங்கச்சான்றோரின் கவியெல்லாம் ஆற் றொழுக்கான பொருளை உடையது என்பதையும் அறியலாம். கல்வி என்னும் திருமாது கவிதை என்னும் மகத்தந்தாள் செல்லும் பலவாம் நடையாலும் சிறந்த உடம்பின் அழகாலும் சொல்லும் இனிய பொருளாலும் சோர்வு போக்கும் இசையாலும் நல்ல.மகிழ்வை உலகினுக்கே நாளும் நல்கி விளையாடும் (தனிப்பாடல்). மாறனலங்காரமும் அரிய மணிகளை வரிசையாக வைத்தாற் போன்ற சொல்வரிசையையுடைய சொல் நலமும், அம்மணிகளின் உள்ளே ஒளி வீசினாற்போன்ற பொருள் நலமும், மணிவரிசையில் ஆங்காங்கு அமைந்த அழகு போன்ற அணிநலமும் பெற்றது உரனுடைப் பழம் பாட்டாகிய சங்கச் செய்யுள் என்பர். அதுவே பிறிதோ ரிடத்தில் "கற்பக மலர் நறுமணம் தருதலைப் போன்றது கவி என்று கூறுகிறது. பரத்தையர் உடல் உள்ளம் போல இலக்கியம் தாம் பெறுகின்ற விலைப்பொருளையே கருத்தாகக் கொண்டிருக்கும் பரத்தையர்தம் அழகிய தோள் போலக் கற்பவர்களெல்லாம் எளிதில் பயிலுமாறு ஒரு இலக்கியம் அமைய வேண்டும். மற்று அம் மகளிரது அறிதற்கரிய உளம்போல் அவ்விலக்கியம் பொருளாழம் உடையதாகவும் இருக்க வேண்டும் என்பர். எனவே எளிமையும் அருமையுமுடையது இலக்கியமாயிற்று. பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக் கற்பவர்க் கெல்லாம் எளியநூல் - மற்றும் முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்கிறோம் அறிதற் கரிய பொருள் HH