பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இயற்கையழகும் செயற்கையழகும் வாய்ந்த பரத்தையர் போல இலக்கியமானது பல்வகை அமைப்பில் சிறந்ததாய் இயற்கையழகும் செயற்கையழகும் வாய்ந்த பரத்தை இளை ஞர்க்குக் கவர்ச்சி நல்குதல் போல இருத்தல் வேண்டும். "புனை எழில் வடிவினாலோர் பொதுமகட் கண்ட மைந்தர் மனமெனப் புலவர் நெஞ்சும் மருளும் இன்தமிழ்ப் பாமாலை" என்ற சீகாளத்திப் புலவர் பாடலை நோக்குக முத்தும் மாணிக்கமும் அமைந்த திரள் மணிவடம் போல வலம்புரிச் சங்கு ஈன்ற முத்தும் மாணிக்கமும் கலந்து செய்த திரள் மணிவடம் போல் அமைந்தது வேக சிந்தாமணி என்னும் இலக்கியம் என்பர். முத்துப் போன்ற எளிமையும் மாணிக்கம் போன்ற அருமையும் உடையது சிந்தாமணி என்பர் நச்சினார்க்கினியர். எது இலக்கியம் "மக்கள் நாகரிக வரலாற்றோடு தொடர்புடைய அனைத்தும் இலக்கிய வரம்புக்குட்பட்டவை" என்பர் எட்வின் கிரீன்லா. மனம் போனவாறு இயங்கும் உலக மக்களின் உள்ளத்தை மாற்றி நன்னெறியிற் செலுத்துவதற்கு அறிஞர் பலர் அல்லும் பகலுமாய் உழைத்தலைப் பார்க்கி றோம். அவர் போன்றே அவரால் இயற்றப்பட்ட இலக்கியமும் நாட்டிற்கு வெகுகாலம் நின்று பயன் தருகிறது. உணர்ச்சி வடிவான அவ்விலக்கியங்கள் கற்கப்பட்டு அங்கே கூறப்பட்ட உயர்நெறிகள் மக்கள் கருத்திலேயே நிலையாகத் தங்கி விடுதலால் அக்கருத்தோடு கூடிய மனம் அவர்களை நன்னெறிக்கு அழைத்துச் செல்கின்றது. இக்காரணத்தினால் உணர்ச்சியைத் துண்டிவிட்டு மக்களை நன்னெறிக்கு அழைத்துச் செல்லும் தனிப்பாடல்களோ, காவியமோ, நாடகமோ, உரைநடையோ, எதுவாக இருப்பினும் அவற்றை இயற்றிய ஆசிரியன் நாட்டிற்கு நன்மை செய்பவருள் சிறந்தவனாகக் கருதப்படுகிறான்.