பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 உவமை உணர்த்துவது வினை, பயன் , மெய், உரு என்பனபற்றி உவமை தோன்றினாலும் அது ஒன்றைச் சிறப்பிக்கவும் ஒன்றானது நலனைச் சொல்லவும் காதலைக் கூறவும் வலிமையைச் சொல்லவும் வரும். அவ்வாறன்றி ஒன்றின் கீழ்மையைப் புலப்படுத்தவும் உவமை வரும். உள்ளுறை உவமை உவமையில் உள்ளுறை உவமை என்பதொன்றுண்டு. அது உவமை ஒன்றனையே செயற்படுத்திக் கூற அதைச் சிந்தித்துப் பொருளின் செயல்முறையை அறிந்து கொள்வது உலக வழக்கில் உவமை மிகுதியும் தோன்றுகின்றது. அது போல உள்ளுறையும் மறைத்துக்கூற வேண்டிய இடத்தில் ஆளப்படுகின்றது. நான் உறவினர் ஒருவர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அவருக்கு இரண்டு மனைவி. அப்பொழுது இளைய மனைவியிடத்தில் அவர் உணவுண்டு வருகின்றார். மூத்த மனைவிக்கும் இளைய மனைவிக்கும் பகை உண்டு. அவர் வீட்டிற்குச் சென்ற யான் அவர் மூத்த மனைவியிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வம்மையாரின் கணவனும் வந்து அப்பேச்சில் கலந்து பேசிக் கொண்டிருந்தார். இதனை இளையமனைவி பார்த்தாள். மூத்தவளோடு எந்தப் பேச்சும் பேசக்கூடாதென்று அவள் கருதுகிறாள். கருதியதை வெளிப்படையாக உணர்த்த முடியவில்லை. பக்கத்தில் பசு ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதன் கன்று அதனிடம் முட்டி முட்டி விளையாடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து இளையமனைவி, "என்ன கண்ணுக்குட்டி உங்க கிழட்டு ஆத்தாளே (அப்பசு கிழப்பசு) முன்ன பின்னே கண்டதில் லையா? சும்மா சும்மா உங்க ஆத்தாக்கிட்ட குழையிறையே" என்று கூறி அதட்டினாள். கணவனும் மூத்தமனைவியிடம் பேச்சை நிறுத்திக் கொண்டு எழுந்து சென்றுவிட்டார். நான் அப்பொழுது கருதிக் கொண்டேன். உள்ளுறை உவமை அகத்திணை இலக்கியத்தில் புலவரால் ஆளப் படுவது. அது செய்யுள் வழக்கிற்கே உரியது என்று கருது கின்றனர். ஆனால் அது உலக வழக்கதிலேயே நன்றாகக் காணப்படுகின்றது என்று கருதிக் கொண்டேன்.