பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 உணர்த்தும் முறையில் உள்ளுறை சில சொற்களை நாம் கேட்கும்பொழுது சில இலக் கியங்களை நாம் படிக்கும்பொழுது கருத்தாழமில்லாதவற்றை வெள்ளைச்சொல், வெள்ளைக்கவி என்று கூறி வருகிறோம். சாதாரண அறிவுடையவருக்குப் புலப்படாமல் ஆழ்ந்த அறிவினருக்குப் புலப்படுமாறு உள்ளுறைப் பொருள் அமைந்த இலக்கியமே மிகச் சிறந்த இலக்கியமாகப் புலவர்களால் கருதப்படுகின்றது. தொல்காப்பியர் உள்ளுறைப் பொருள் தருவனவற்றைத் தொகுத்து உடனுறை, உவமை, சுட்டு, நகை, சிறப்பு என கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்து என்று கூறுகின்றனர். அவ்வைந்தில் உவமம் என்பது உள்ளுறை உவமமாகும்.உள்ளுறை உவமமும் ஏனை உவமமும் திணைப்பொருளை உணர்த்தும் என்று தொல்காப்பியர் அகத்திணைஇயலில் கூறுகிறார். இறைச்சிப் பொருள் மேற்கூறிய உள்ளுறைப் பொருள் தரும் ஐந்தில் 'உடனுறை என்பது ஒன்று. அதனை நச்சினார்க்கினியர் " உடனுறை - நான்கு நிலத்தும் உள்ளவாய் அந்நிலத்துடன் உறையும் கருப்பொருளால் பிறிதொன்று மறைத்துக் கூறும் இறைச்சியும்" என்று விளக்கம் தந்துள்ளார்.