பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 மொழிநடை இயலிசை நாடக மெனுமுத் தமிழின் இயல்பும் இயலும் நடையும் வேறாம் இயற்றமிழ் தம்முள் தொல்காப் பியர்தம் காலத் தெழுந்த செய்யுள் நடையைச் செப்பிடின் இருவகை அடிவரை உடையன அடிவரை இலவென வகுக்கப் பட்டு, வழங்கிடும் உலகில் அடியின் ஈட்டத் தழகுபெற் றியலும் அடிவரை யுடைய அழகிய தொடைபுணர் பாட்டின் நடையே பற்பல வகையாம் அவற்றுள், அகவிக் கூறும் ஆசிரிய நடையும் செப்பிக் கூறும் வெண்பா நடையும் தூங்கி இசைக்கும் வஞ்சி நடையும் துள்ளி ஒலிக்கும் கலிப்பா நடையும் செப்பலும் அகவலும் சேர்ந்து மயங்கிய மருட்பா நடையும் பலபா வுறுப்பினைப் பரிந்துநின் றேத்தும் பரிபாடல் நடையும் வெவ்வே றாக விளங்கி நடக்கும் அடிவரை இலாத செய்யுள் யாவும் நூற்பா நடையெனும் இலக்கண இயல்நடை உரையின் வகையென உரைக்கும் பலநடை பிசியின் நடையே மந்திர நடையே அங்கத நடையே முதுமொழி நடையென உலகின ரிடத்தே வழங்கப் பட்டு வழங்கின அன்று வகைவகை யாக பிற்கா லத்தே பெருகிய நடையுள் பாநடை வேறே இனநடை வேறே: பாநடை நிற்க, இனநடை தானே புலவரைக் கவர்ந்த புதுநடை யாகும்; இலக்கிய நடையை இனிதுறக் கிளப்பின்