பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 தனிப்பாடல் நடையே தகமுதல் எழுந்தது அதனுள் சான்றோர் என்னும் சங்கப் புலவரின் பாடல் நடையே பண்புள நன்நடை: அதுவே, அகப்பொருள் நடையாம் காதல் நன்னடை புறப்பொருள் நடையாம் பொருள்செய் நன்னடை என்னும் இரண்டாய் எழுந்துநின் றதுவே: பின்னர் வந்த பெருமைசால் புலவர் தொடர்நிலைப் பாடல் தோன்ற இசைக்கக் காப்பிய நடையே கவின்பெற எழுந்தது சிற்றிலக் கியநடை சேர எழுந்தது பொருள்வேறு பாட்டால பாவேறு பாட்டால் பலவா யினவே சிற்றிலக் கியநடை இவையன்றி, செம்மை குறையாச் செந்தமிழ் நடையாம் சேரன் தமிழ் சிலம்பை இசைத்தது செந்தமிழ் நடையே, செப்பினர் அவர்தாம் கோடி வழங்கும் கொடுந்தமி ழாலே கூறும் இலக்கியம் கொடுந்தமிழ் நடையே புலவர்க் குரிய பொருள்நிறை மொழியால் செய்யுள் செய்வது செந்தமிழ் நடையே உலக மக்கள் உரைத்திடும் மொழியால் செய்யுள் செய்யின் சிறந்ததன் றேனும் எளிய நடையாய் எளிதில் பொருள்வரும் சிலதள நோக்கிச் செம்மை யிலாத கொடுந்தமிழ் நடையெனக் கூறினர் அதனை உரைத்த பொழுதே உணர்ச்சி எழுந்திட மெய்ப்பா டெட்டினை மேவிநிற் கின்ற புலமை மிகுநடை பொருட்சுவை நடையாம்; உணர்ச்சி நடையென உரைப்பர் அறிஞர் இதனை, நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென