பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நோக்கு நோக்கல் நோக்கல் என்பது ஒரு தொழிற்பெயர். இதனை நோக்கு என்றும் வழங்குகிறோம். இச்சொல் பார்த்தல், பாதுகாத்தல் என்னும் பொருளில் வருகின்றது. இது அழகு என்னும் பொருளில் வரும்பொழுது இதனைப் பண்புப் பெயராகக் கொள்ள வேண்டும். நோக்கல் தெரிசித்தல் பார்த்தல் காண்டல் காட்சி என்பது கண்ணுற லாகும். என்பது பிங்கலம். இந்நூற்பா நோக்கல் என்பது கண் ணுறல் (பார்த்தல்) என்ற பொருளில் வரும் என்று கூறுகின்றது. திதிநிலை பெறுதல் நோக்கல் புரத்தல் காத்தல் என்னக் கழறப் படுமே என்பது திவாகரம். இந்நூற்பா நோக்கல் என்பது காத்தல் என்னும் பொருளில் வரும் என்று கூறுகின்றது. நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து என்னும் குறளில் பரிமேலழகர் நோக்கினாள் என்னும் சொற்கு அழகுடையவள் என்று பொருள் கூறுவர். பிங்கல நிகண்டாசிரியர் செழுமையும் பந்தமும் தேசிகமும் நோக்கும் முதலிய சொற்கள் அழகினை உணர்த்தும் என்பர். இளம்பூரணர் நோக்க என்பது உவமைப் பொரு ளிலும் வரும் என்பர் (உவமவியல்) தொல்காப்பியர் தொல்காப்பியர் இரண்டாம் வேற்றுமைப் பொருளைத் தொகுத்துக் கூறும் பொழுது நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றாஎன நோக்கலையும் கூறியுள்ளார். இதற்கு இளம்பூரணர் செய்யை நோக்கும் எனப் பாதுகாத்தற் பொருளில் எடுத்துக்காட்டிக் கூறுகிறார்.