பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சேனாவரையர் பார்த்தல் என்னும் பொருளில் கணையை நோக்கும் என்று எடுத்துக் காட்டுக் கூறுகின்றார். வேற்றுமை மயங்கியலில் இரண்டன் மருங்கில் நோக்கல் நோக்கம் இரண்டன் மருங்கின் ஏதுவு மாகும் என்னும் நூற்பாவுரையில் சேனாவரையர், "நோக்கலின் அஞ்சலின்" (சொல்-72) என இரண்டாவதற்கோதிய நோக்கப் பொருண்மை நோக்கிய நோக்கமும் நோக்கல் நோக்கமுமென இரண்டு வகைப்படும் நோக்கியநோக்கம் என்பது கண்ணால் நோக்குதல், நோக்கல் நோக்கம் என்பது மனத்தால் ஒன்றனை நோக்குதல் என இரண்டு பிரிவாக வகுத்தோதியுள்ளார். மேற்கூறிய செய்திகளால் நோக்கு என்பது எவ்வெப் பொருளில் வரும் என்பதை உணர்ந்து கொண்டோம். தொல்காப்பியர் செய்யுளியலில் செய்யுட்குக் கூறும் உறுப்புக் களில் நோக்கு ஓர் உறுப்பாக வரும் என்று கூறி அதற்கு இலக்கணமும் வகுத்துள்ளார். நோக்கு என்னும் செய்யுளுறுப்பு தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளைத் தொகுத் தோதும் வழி நோக்கே பாவே அளவிய லெனாஅ" (செய்யுளியல் -1) என்று நோக்கினையும் ஓர் உறுப்பாக எடுத் தோதியுள்ளார். பின்னர் நோக்கிற்கு இலக்கணம் கூறுங்கால், மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே (100 என்று கூறுகிறார். நோக்குதல் என்பது செயப்படு பொருள் உள்ள வினைச்சொல் அல்லவா? எவற்றை நோக்குதல் என்று வினாவின் மாத்திரையை, எழுத்தியலை அசைவகையை, யாத்த சீரை, அடியை என்னும் ஐவகை உறுப்பினையும் மனத்தால் நோக்குதற்குக் காரணமானவை நோக்கு என்பதாம். இருவர் உரை __ இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் உரை,பேராசிரியர் உரை, நச்சினார்க்கினியர் உரை என்னும் மூவர் உரை உள்ளன. நச்சினார்க்கினியர் பேராசிரியர் உரையினைத் தழுவியே