பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 ஒசைப்பொலிவு பொருளின் பொலிவும் சொல்லின் செல்வமும் தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து உருவகம் முதலாம் அலங்கார முட்கொண்டு ஒசைப் பொலிவுற் றுணர்வோ டுளங்கட்கும் மாகடல் அமிழ்தம்போல் பாடுதல் மதுரகவி பொருட்பொலிவும் சொற்செல்வமும் தொடையும் விகற்பமும் பொருந்த, உருவகம் முதலான அணிகள் அழகு செய்ய, ஒசைப் பொலிவோடு பொருந்தி உணர்வோர் உளங்கட்கு அமிழ்தம் போல் இனிக்குமாறு பாடுவது மதுரம் என்னும் கவி வகையாகும் என்று திவாகர நிகண்டு கூறுகிறது. மேற்குறிப்பிட்ட மதுரகவி இலக்கணத்துள் ஒன்று. ஒசைப்பொலிவாகும். உரையுட லாக உயிர்பொரு ளாக உரைத்த வண்ணம் நிரைநிற மாநடை யேசெல வாநின்ற செய்யுட்களாம் தரைமலி மானிடர் (141) என்னும் வீரசோழியப் பாடல் செய்யுள் என்பது ஒரு மனிதனை ஒத்தது. அம்மனிதனுக்குப் பலவகைச் சொற் களெல்லாம் உடம்பாகும்.அப்பாட்டில் கூறப்படும்பொருளே உயிராகும் வண்ணம் ஓசையே நிறமாகும் நடையே செல்லுதல் என்னும் இயக்க மாகும் என்று கூறுகின்றது. யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர்: மதுரகவியின் இலக்கணத்தை மேற்கூறிய திவாகர நூற்பாவை கருத்தில் வைத்துக் கொண்டு " மதுரகவியாவான் சொற்செல்வமும் பொருட்பெருமையும் உடைத்தாய்த் தொடையும் தொடை விகற்பமும் துதைந்து உருவகம் முதலாகிய அலங்காரங்களை உட்கொண்டு ஒசைப்பொலிவு உடைத்தாய், உய்த்துணரும் புலவர்கட்கு ஒலி, கடல் அமிழ்தம் போன்று இன்பம் பயக்கப்பாடுவான்" என்று கூறுகின்றார்.