பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 இவர் கருதுவது, பாட்டில் ஒசைப் பொலிவு இருக்க வேண்டும்; அவ்வோசைப் பொலிவு அமிழ்தம் போல் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். பாட்டிற்கு அமிழ்தம் போன்ற ஒலியைப் புலவர்கள் எப்படி உண்டாக்குகின்றார்கள் என்பதைச் சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ஒசை மூன்று தமிழ்ப் பாடல்களில் உள்ள ஓசையைத் தலைமை பற்றி இயற்றமிழ் ஓசை, இசைத்தமிழ் ஓசை நாடகத் தமிழ் ஒசையென மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். இவற்றில் முதற்கண் நிற்பது இயற்றமிழ் ஒசையாகும். தொல்காப்பியர் பாட்டு, உரை, நூல், பிசி, முதுசொல் வாய்மொழி, அங்கதம் என்று ஏழுபிரிவாகச் செய்யுளைக் கூறுகிறார். அவற்றில் பாட்டிற்கே அவர் ஓசை கூறுகின்றார். ஏனையவற்றிற்கு அவர் ஒசையைக் கருதிக் கூறவில்லை. பாட்டின் ஒசை ஆசிரியப்பா அகவல் ஒசையால் வரும், வெண்பா செப்பல் ஒசையால் வரும், வஞ்சிப்பா துரங்கல் ஒசையால் வரும், கலிப்பா துள்ளலோசையால் வரும் என்பர். மாறுபாடான ஒசை அகவல் ஓசையும் செப்பல் ஒசையும் தமக்குள் மாறுபாடுடையன. 'அகவல் என்பது ஆசிரி யம்மே (செய்.77) 'அஃதன் றென்ப வெண்பா யாப்பே' (செய்.78) அகவலோசையல்லாததுவெண்பாயாப்புக்குரிய ஓசை என்பர். மெலிந்த ஒசையாகிய வஞ்சியோசையும், உயர்ந்த ஓசையாகிய துள்ளலோசையும் தம்முள் மாறுபாடுடையன. அகவல் ஒசை "அகவல் என்பதும் அழைத்த லாகும்" என்பது பிங்கல நிகண்டு. பேராசிரியர் அகவிக் கூறுதலான் அகவல் எனக் கூறப்பட்டது. அஃதாவது கூற்றும் மாற்றமுமாகி,