பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாங் கருதியவாறெல்லாம் வரையாது செல்வதோர் ஆறும் உண்டு. அதனை வழக்கிலுள்ளார் அழைத்தலென்றும் சொல்லுப; அங்ாவனம் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாம் தொடர்ந்து கிடந்த ஒசை அகவலெனப்படும். அவை தச்சவினை மாக்கள் கண்ணும் களம்பாடும் வினைஞர் கண்ணும் கட்டும் கழங்கும் இட்டு உரைப்பார்கண்ணும் தம்மில் உறழ்ந்துரைப் பார் கண்ணும், பூசலிசைப்பார் கண்ணும் கேட்கப்படும். கழங்கிட்டுரைப்பார் அங்ங்னமே வழக்கினுள்ளதாய்க் கூறும் ஒசை ஆசிரியப்பா வோசை எனப்படும் என்றவாறு என்! ዘነ . அகவல் ஒசைக்குக் காரணம் அகவற்பா-ஐவகை அடியாலும் வரும் ஆசிரியப் பாவிற்குமுள்ள இலக்கணங்களைப் பெற்ற பாவில் அகவல் ஒசையைக் காணலாம். ஆசிரியப்பா பெரும்பான்மை இயற் விராலும் ஆசிரியர் உரிச்சீரானும் ஆசிரியத் தளையானும் அகவலோசையானும் நாற்சீரடியானும் சிறுபான்மை ஒழிந்த சீரானும் தளையானும் அடியானும் வருவது என்பர் இளம்பூரணர் (தொல், செய். 113). * யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் அகவலோசை யோடு அளவடித்தாகியும் இயற்சீர் பயின்றும் அயற்சீர் விரவியும் தன்றளை தழுவியும் பிறதளை மயங்கியும் நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வருதலை ஆசிரியப்பா என்று கூறுகிறார். இயற்சீரும் ஆசிரிய உரிச்சீரும் வந்து ஆசிரியத்தளை பெற்று வருதலே அகவலோசைக்குக் காரணம் என்று இளம்பரணர் கூறுதலை மேலே பார்த்தோம். பிற்கால மாலாகிய யாப்பருங்கல விருத்தியாசிரியர் இயற்கருள் தோன்றும் அகவல்" என்பர். யாப்பருங்கல விருத்தியாசிரியர், காரிகை உரையாசிரியர் முதலியோர் நேர் நேர் இயற்றளையான் வரின் ஏந்திசை அகவல் என்றும் நிரை, நிரை இயற்றளையான் வரின் - El