பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 துங்கிசை என்றும் இரண்டு தளையும் விரவிவரின் ஒழுகிசை அகவலாமென்றும் கூறுவர். இவற்றிற்கு முறையே, போது சாந்தம் பொற்ப வேந்தி ஆதி நாதர் சேர்வோர் சோதி வானந் துன்னு வாரே என்பதும், அணிநிழ லசோகமர்ந் தருனெறி நாடத்திய மணிதிக ழவிரொளி வரதனைப் பணிபவர் பவநளிை பரிசறுப் பலரே என்பதும் குன்றக் குறவன் காதன் மடமகள் வரையறை மகளிர் புரையும் சாயலின் ஐய ளரும்பிய முலையள் செய்ய வாயினன் மார்பினள் சுணங்கே என்பதும் எடுத்துக்காட்டாம். இன்னும் அகவல் ஓசை இயற்சீராலே வந்தும் அயற்சீர் கலந்து வந்தும் ஒன்றினைத் தழுவியும் பிறதளை தட்டும் வந்தும் முடியும் என்பர் (யா.வி. ப. 268) இன்னும் சீர்தோறும் அகவலோசை பிழையாது வருவது சித்திர அகவல் என்றும், அகவற்பாவில் வரும். நாற்சீரடியும் இருபதெழுத்தின் மேல் வரில் ஏந்திசை அகவல் என்றும் பெயர் பெறும் என்பர் (யா,வி.ப. 285). இவை எல்லாம் ஒசை வேறுபாட்டிற்குக் காரணங்களாம். செப்பலோசை வெண்பா என்னும் பாட்டு செப்பல் ஓசை உடையது என்பர். பேராசிரியர் " அகவிக் கூறாது ஒருவற்கொருவன் இயல்பு வகையானே ஒரு பொருண்மை கட்டுரைக்குங்கால் எழும் ஒசை செப்பலோசை எனப்படும் (சொல்.செய்82) என்பர். செப்பலோசை உண்டாகக் காரணம் வெண்பா - அளவு சிந்தால் வரும்; வெண்பாவிற்குரிய இலக்கணத்தினைப் பெற்று வரும் 7,8,910,11,12,1314