பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 நச்சினார்க்கினியர் அடியிறுதியிற்றுங்காது சீர்தொறும் துங்கும் ஒசையையுடையது வஞ்சிப்பா என்பர். மேலும் அவர் துள்ளலும், தூங்கலும் வழக்கின்கண் நிகழாவென்று கொள்க என்பர். துரங்கலோசை வருதற்குக் காரணம் இனி வஞ்சிப்பா ஆவது வஞ்சியுரிச்சீரானும் ஏனைச் சீரானும்இருசீரடியானும் முச்சீரடியானும் வரும். அங்ங்னம் வருதலே துங்கலோசை தோன்றற்குக் காரணமாம் என்பர் இளம்பூரணர். பேராசிரியர் துரங்கலோசை அவைபோல நாற்சீரடி களன்றி இருசீர்க் கண்ணும் சிறுபான்மை முச்சீர்க்கண்ணும் துக்குக் கொள்ளப்படும் என்பர் (செய்யுளியல் 87, வஞ்சியுரிச்சீர் அறுபதாலும் துங்கலோசை பிறக்கும் "ஆசிரிய நடைத்தே வஞ்சி" (செய்யுளியல் 108) என்பதனால் ஆசிரிய உரிச்சீராலும் தூங்கலோசை பிறக்கும். வீடுபேறு மிகவிழைந்து நீடுநினைத்து நெடிதிருந்து என அகவற் சீரான் வஞ்சித் துக்கும் பிறந்தது என்பர் பேராசிரியர் (செய். 108). துங்கலோசை துங்கலோசையும் மூன்று விதமாகும். ஒன்றிய வஞ்சித் தளையான் வந்தது ஏந்திசைத்துள்ளலோசை என்றும், ஒன்றாத வஞ்சித் தளையான் வந்தது அகவல் தூங்கலோசை என்றும், பல தளையும் விரவிவரின் பிரிந்திசைத் துரங்கல் ஓசை என்றும் கூறப்படும். கலிப்பாவோசை துள்ளல் கலிப்பா துள்ளலோசையான் வரும் என்பர். கலித்த ஒசையை உடையது கலிப்பா ஆகும். கலித்தல் - துள்ளல் (வெண்பாவோசையின்) வெண்சீரின் விகற்பம் கலிப்பா ஆகும் (விகற்பம் கலிப்பா) என்று கூறும் பிங்கலநிகண்டு.