பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 துள்ளுதலாவது ஒழுகு நடைத்தின்றி இடைஇடை _யர்ந்து வருதல். கன்று துள்ளிற்று என்றாற்போலக் கொள்க என்பர் இளம்பூரணர். "வெண்சீரில் செப்பல் பிறக்கும் விகற்பத்துப் பண்பாய்ந்த துள்ளல் படும்" என்பது யாவி, மேற்கோள். பேராசிரியர் துள்ளலோசை என்பது வழக்கியலாற் சொல்லாது முரற்கைப்படுமாற்றால் துள்ளச் சொல்லும் ஓசை என்பர். துள்ளலோசைக்குக் காரணம் 'கலிப்பா, நேரீற்று இயற்சீரும், நிரைநடுவாகிய வஞ்சி யுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பாவுரிச்சீரும் மிக்கு நேரடித்தாய் தன்றளையும் பிறதளையும் தட்டுவரும். அது பதின்மூன்றெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த எட்டுநிலம் பெற்று வரும் என்பர் (யாக விருத்தி யாசிரியர்). துள்ளல் ஒசை மூன்று: 1. கலித்தளையே இயைந் துவரின் ஏந்திசைத் துள்ளல் ஆகும். 2. வெண்டளையும் கலித் தளையும் இயைபில் அகவல் துள்ளல் ஆகும். 3. தன்றளையும் பிறதளையும் விரவிவரின் பிரிந்திசைத் துள்ளல் ஆகும். பரிபாடல் இயற்றமிழ்ப் பாட்டில் வெண்பாவின் வகையைச் சார்ந்து வருவது பரிபாடலாகும். இது வெண்பாவின் வகையைச் சார்ந்தது என்பதால் இதனைச் செப்பலோசை யுடையது என்றே கூறல் வேண்டும். ஆனால் இது பல உறுப்புக்களுடன் தொடர்ந்து, கலிப்பாவின் வேறுபட்டு வரும். இளம்பூரணர் பரிபாட்டாவது பரிந்த பாட்டாம். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பலவுறுப்புக் களோடும் தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப்பெறுவது எண்பர். பேராசிரியர் பரிபாடலென்பது பரிந்து வருவது. அஃதாவது கலியுறுப்புப் போலாது பல அடியும் ஏற்று வருவது என்பர். நச்சினார்க்கினியர் பரிபாடல் என்பது பரிந்து வருவது; அது கலியுறுப்புப் போலாது நான்குபாவானும் வந்து பல அடியும் வருமாறு நிற்கும் என்றுணர்க என்பர்.