பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மேற்கூறிய உரையாசிரியரெல்லாம் பரி' என்பதற்குப் பரிந்து என்று விரித்து அதற்குத் தொடர்ந்து, ஏற்று, பல அடியும் வருமாறு எனப் பொருள் கூறுகின்றனர். ஆனால் 'பரி என்பதற்குச் செல்கை, கதி என்று பொருள் கூறலாம். பரிபாடலில் இன்னியல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்' (11-137) என்று வருவதைக் கருதின் இடைப் போக்கில், இசை நடையில் அமைந்த பாட்டு என்று கூறல் பொருந்தும் இது பாலையாழ், நோதிறம், காந்தாரம் என்றும் இடைகளில் வரும் என்று கூறப்படுவதும் மேற்கருத்தை வலியுறுத்தும். மருட்பா வெண்பாவில் தொடங்கி ஆசிரியப்பாவால் முடிவதே மருட்பா ஆகும். (மருள்) என்பது மயக்குதல், கலத்தல் என்ற பொருளில் வரும். வெண்பாவும் ஆசிரியப்பாவும் இயைந்த செப்பலோசையும் அகவலோசையும் கலந்து வருவது மருட்பாவாகும். இப்பாட்டில் கலப்போசையைக் காணலாம். அகவல் முதலிய நான்கோசையுள் வரும் ஒசைகள் ஆசிரியப்பா அகவலோசையைப் பெற்றும் அதன் நடையைப் பெற்று வரும். வஞ்சிப்பா துரங்கலோசையைப் பெற்றும் வெண்பா செப்பலோசையைப் பெற்றும் அதன் நடையையுடைய கலிப்பா துள்ளலோசையைப் பெற்றும் வரும் என்று பொதுவாகக் கூறினாலும், அகவலோசை நேரிசை ஆசிரியப்பாவில் இணைக் குறளாசிரியப்பாவில் மண்டில ஆசிரியப்பாவில் சிறிது வேறுபட்டு வரும். அது போன்றே துங்கலோசை குறளடி வஞ்சிப்பாவில் சிந்தடி வஞ்சிப்பாவில் சிறிது சிறிது வேறுபட்டு வரும். வெண்பாவுள் குறள் வெண்பாவில் சிறிய செப்ப லோசையைக் காணலாம். நேரிசைக் சிந்தியல் வெண்பாவிலும் நேரிசை வெண்பாவிலும் ஒருவகையான செப்பலோசை யினையும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிலும் இன்னிசை வெண்பாவிலும் மற்றொரு வகையான செப்பலோசை யினையும் காணலாகும். இவ்வோசைகள் நடுநிலையான செப்பலோசைகளாம்.