பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 "வெண்டுறின், "செந்துறைப் பாட்டே பாடற் கேற்பது"அப் பாட்டே ஆடற்கேற்பது" ஆதலின் (பிங்கலம் ப. 222) இவ்விரு பாட்டிற்கும் வேற்றுமை தெரியுமாறு யாழ் நரம்போசைக்குத் தக்கவாறு மந்த இசை மத்திய இசை உச்ச இசை இவைகளை எல்லாம் ஆராய்ந்து பாடினாள் என்பர். இங்கே பாடுதல் தலைமையாகும். புறப்பொருள் வெண்பா மாலையில் ஆடல் வென்றி கைகால் புருவம்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங் கொம்பன்னாள் குறுக்கொண்டு - பொய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வ ளைநின் றாடும் தொடுகழன் மன்னன் துடி கொய்பூங்கொத்தை ஒத்த ஆடுமகள் கையாலும் காலாலும் புருவத்தாலும் கண்ணாலும் தாளத்தையும் நடையையும் இசைக்கும் பாடலையும் கருதிக்கொண்டு ஆடினாள். இங்கே ஆடல் தலைமை பாடல் முதலியன அதற்கு உறுப்பு. மேற்கூறியவாற்றால் பாடற்கேற்பது செந்துறைப் பாட்டென்பதும், இதற்குத் தாளம், யாழ், குழல் முதலியன வெல்லாம் துணை உறுப்புகள் என்பதும் மிடற்றுப்பாட்டே தலைமையாகும் என்பதும், ஆடற்கேற்பது வெண்டுறைப் பாட்டென்பதும் இதற்குக் கையாலும் புருவத்தாலும் கண்ணாலும் அபிநயமும் குறிப்பும் செய்து காலால் சீர் என்னும் சதி அமைய ஆடுவதே தலைமை என்பதும் தாளம் பாட்டு முதலியனவெல்லாம் துணை உறுப்புக்களாம் என்பதும் புலனாகின்றன. எனவே செந்துறை மார்க்கத்தில் பாடல் தலைமை பெற்றும் வெண்டுறை மார்க்கத்தில் பாட்டு ஆடலுக்குத் துணை புரிந்தும் இயங்கும். பாணி தள்ளாத பாடல் இசைத்தமிழ்ப் பாட்டிற்கும் நாடகத் தமிழ்ப் பாட்டிற்கும் தாளம் நன்கு அமைய வேண்டும். "பாணிதள் ளாத பாடல் அமுதுகப் பாடுவாரும்" (கம்ப. சுந்தர 282) என்பது கம்பராமாயணம்.