பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 பண் 'பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல்' என்பது திருக்குறள். 'பண்' என்றது இசைத்தமிழ். இசையை பரிமேலழகர் அப்பண் நூற்று மூன்று என்பர். அந்த நூற்று மூன்று பண்ணும் பாடல் தொழிலொடு பொருந்தாதாயின் பயனில்லை என்பர். பண்ணத்தி பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டின் இயல பண்ணத் தியே" என்னும் (தொல்,செய173 நூற்பாவுரையுள் இளம்பூரணர் பண்ணத்தி என்பது பண்ணைத் தோற்றுவிக்கும் செய்யுள் என்றும், பண்ணைத் தோற்றுவித்தலால் பண்ணத்தி எனப் பெயர் பெற்றதென்றும், அவையாவன சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத்தமிழில் ஒதப்படுவன" என்பர். இசைப்பாடல்கள் சிலப்பதிகாரம் கடலாடு காதையில் "மாயோன் பாணியும்" (35) என்ற பகுதிக்கு அடியார்க்கு நல்லார்" மாயோன் என்றது திருமாலை பாணி என்பது பாட்டு. அது தேவரைப் பரவுதலாயிற்று. என்னை? தொல்காப்பியர் "wனையொன்றே தேவர்ப்பராய முன்னிலைக் கண்னே" என்றாராகலின் தேவ பாணி என்னும் பாட்டு முத்தமிழ்க்கும் பொது, அது இயற்றமிழில் வரும்பொழுது கொச்சக ஒரு போகாய் வரும். அவ்வாறு வரும்பொழுது அது பெருந்தேவ பாணி சிறு தேவபாணி என இருவகைத்தாய் வரும். இனி இசைத்தமிழில் வரும்பொழுது முகநிலை, கொச்சகம் முசி என்ப ஒரு சாராசிரியர். அன்றி இசைப்பா இசையளவு பா என்னும் இரு பகுதியுள் இத்தேவபாணி இசைப்பாவின் பகுதியுள் அடங்கும். இசைப்பாக்கள் பத்து வகைப்படும்; செந்துறை, வெண்டுறை, பெருந்தேவ பாணி, சிறுதேவ பாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்றுவரி, கானல் வரி, விரிமுரண், தலை போகுமண்டில மென (இசை துவைஃமுடைய சிகண்டியார்).