பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 இன்னும் சுத்தம் சானகம் தமிழ் என்னும் சாதி யோசைகள் மூன்றினுடனும், கிரியைகளுடனும் பொருந்தும் இசைப்பாக்கள் ஒன்பது வகை என்ப. அவை; சிந் து, திரிபதை, சவலை, சமபாதவிருத்தம், செந்துறை, வெண்டுறை பெருந்தேவபாணி, சிறுதேவபாணி, வண்ணம் என்ப (பஞ்ச மரபுடைய அறிவனார்). இனி நாடகத்தமிழில் தேவபாணி வருங்கால் பெருந் தேவபாணி பல தேவரையும், சிறுதேவபாணி வருகைப் பூதனாயும் மூவடி முக்கால் வெண்பாவால் துதிக்கப்பட்டு வரும் என்பர் (சிலப்பதிகாரம் - கடலாடு - ப. 190). நாடகத்தமிழ் நாடகத் தமிழில் வரும் சொல் உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் என மூன்று வகைப்படும் என்பர் அடியார்க்கு நல்லார் (அரங்கேற்று காதை 87) அவற்றுள் உட்சொல் என்பது நெஞ்சொடு கூறல் என்றும், புறச்சொல் என்பது கேட்போர்க்குரித்து என்றும், ஆகாயச்சொல் என்பது தானே கூறல் என்றும் கூறுவர். நாடகத்தமிழ் சொல்வகை நான்கு நாடகத்தமிழில் சொல்வகை சுண்ணம் என்றும் சுரிதகம் என்றும் வண்ணம் என்று வரிதகம் என்றும் நான்கு வகைப்படும் எனவும், சுண்ணம் நான்கடியாலும், சுரிதகம் எட்டடியாலும் வண்ணம் நானான்குஅடியாலும் வரிதகம் முப்பத்திரண்டடியாலும் வரும் என்பர். வண்ணம்மற்றொரு வகையால் மூன்றுவகைப்படும். பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு வண்ணம் என. அவற்றுள் பெருவண்ணம் ஆறாகவும் இடைவண்ணம் இருபத்தொன்றாகவும் வனப்பு வண்ணம் நாற்பத் தொன்றாகவும் வரும் என்பர். வரி கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர் வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எட்டு வகைப்படும் என்பர்.