பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 ா ஆசிரியனாக இருந்து தன்பால் கற்கும் மாணவர்க்கு _ாத்தும் பொழுது ஒரு காற்பங்கு, தன்னைப் போல அlறோர் அவைக்களத்தில் உணர்த்துவதால் ஒரு காற்பங்கு வliபடுகின்றன. எனவே, ஒருவனுக்கு ஆசிரியனிடம் மூன்று முறை பாடங்கேட்டலால் ஒரு காற் கூறு புலமையும், தன்போன்ற மாணவரிடம் பயிலுதலால் ஒருகாற் கூறு புலமையும் _ாரும் முறைக் கல்வியால் கிடைக்கின்றன. பின்னர் தன் மாணவர்க்குப் பாடம் சொல்வதால் ஒரு காற் கூறும், கற்றறிந்தோர் நிறைந்த அவைக்களத்தில் பேசுவதால் ஒருகாற் கூறும் உணர்த்தும் முறைக் கல்வியால் கிடைக்கின்றன. பல்காற் பழகுதல் ஒர் இலக்கியத்தில் நல்ல பயிற்சி அறிவு வர ஒருவர்க்குப் பஸ்காl பயிற்சி வேண்டும். பல்காற் பயின்றும் தெரியா வுளவேல் தொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார் மூன்றினும் முழங்கும் என்ற இலக்கணக் கொத்துரைப் பகுதியில் அவ்வாசிரியர் "முக்காற் பார்த்து நல்லோர் பலருடனும் பலகாலும் பயின்று பிறாக்கறிவித்தல் முதலான எல்லாம் அடங்கப் பல்காற் பழக்கம்' என்றாம் என்பர். இங்கே இவர் உணரும் முறை யால் புலமை பெறுதலையும் உணர்த்தும் முறையால் புலமை பெறுதலையும் குறிப்பிட்டிருத்தலைக் காணலாம். இலக்கணக் கொத்துரையாசிரியர் ஒருவன் நூல்களில் எவ்வாறு பயில வேண்டும் என்பதைத் தொகுத்துணர்த்தி யுள்ளார். அவை வருமாறு: (1) சூத்திரம் சில சில நோக்குதற் கரிதேல் முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக சில நூற்பாவிற்கு, அல்லது சில பாடல்களுக்குப் பொருள் விளங்காதாயின், அப்பொழுது அவற்றில் அழுந்தியுணராமல் விடுக. அந்நூலில் முன்னாவது, பின்னாவது தான் முன்பு கற்ற நூலினிடத்தாவது, பின்பு கற்கும் நூலினிடத்தாவது அவற்றின் பொருள் விளங்கிக் கிடக்கும்.