பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கற்கும் நிலையிலும் மேலே கேள்வியின் நான்கு நிலைகளை அறிந்தோம். அந்த நான்கு நிலையிலும் முதல் நிலையாகிய கற்கும் நிலை அடிப்படை ஆதலின் அது ஒருவர்க்கு நன்றாக அமைதல் வேண்டும். ஒரு நல்ல மாணவன் நல்லாசிரியன் ஒருவனிடம் ஒர் இலக்கியத்தை ஒருமுறை பாடம் கேட்கிறான். ஒருமுறை பாடம் கேட்டலாகிய அவ்வொன்றினாலேயே அவனுக்கு அவ்விலக்கியத்தில் நல்ல பயிற்சி வந்துவிடுதில்லை. ஒரு முறைக்கு மேல் இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கூடப் பாடம் கேட்க வேண்டும் என்பர் பவணந்தியார் ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபா டிலனே H. முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும் என்று கூறுவர் அவர் கற்கும் பொழுதும் தன்போன்ற மாணவருடன் கூடித் தான் ஐயுற்ற பொருளை அவரிடம் வினாவி உண்மை உணர்ந்தும் அவர் ஐயுற்று வினாவிய வற்றிற்கு விடை கூறி உண்மை உணர்த்தியும் இவ்வாறு கற்றலால் ஒருகாற் பங்கு புலமை எய்துகிறது என்பர் பவணந்தியார். கற்றபின் மேலே கூறியவாறு கற்றபின் சான்றோர் பலரிடம் கேட்டல் வேண்டும் என்பது மேலே கூறப்பட்டது. இவையெல்லாம் உணரும் முறையாகும். இலக்கிய அறிவு உணரும் முறையாலும் உண்டாகும். பிறர்க்கு உணர்த்தும் முறையாலும் உண்டாகும். ஒருவன் உணர்த்தும் முறையைத் தொடங்கிய பொழுதுதான் அவன் அறிவு நன்கு வளரத் தொடங்குகின்றது.உணர்த்தும் முறையில் தான் உணர்ந்ததை பிறர் விளங்கிக் கொள்ளும் முறையில் உணர்த்தியாக வேண்டும். அப்பொழுதுதான் ஒருவன் தான் உணர்ந்ததைப் பிறர்க்குப் புரியவைக்கும் முறையில் இலக்கியப் பொருளை ஆய்கிறான். அந்தநிலையில் அவனுக்குத் தான் உணர்ந்த இலக்கியத்திலே முழுப் புலமை கிடைக்கிறது. அப்புலமையும்