பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 _பது ஒன்றுக்கொன்று காரணமாய் நான்கு வகையாக ருெக்கின்றது. இதனைப் பிங்கல நிகண்டு, கற்றல்கேட்டல் அவ்வழி நிற்றல் ஒத்தல் நால்வகைக் கேள்வியாகும் _று கூறுகின்றது. கற்றல் - ஆசிரியனிடம் பாடம் கேட்டலாகிய கேள்வி கேட்டல் - சான்றோர்.பால் கேட்க வேண்டியவற்றைக் கேட்டலாகிய கேள்வி அதன் வழி நிற்றல் - கற்ற வழி கேட்ட வழி நிற்றல் ஒத்தல் - கேட்டு நின்று கேட்டவற்றோடு வேறுபடாமல் ஒத்து ஒழுகுதல் எனவே மேலே கூறிய நூற்பாவின் கருத்துப்படி, கேட்டலில் கற்றல் முதல் நிலை, கேட்டல் இரண்டாம், நிலை, அதன்வழி நிற்றல் மூன்றாம் நிலை, ஒத்தல் நான்காம் நிலை ஆகும். இந்த நான்கும் கேள்வியாகும் என்பது. ஒருவற்கு இந்த நான்கு நிலையும் கைவரல் வேண்டும் ஒருவன் ஓர் இலக்கியத்தை முதன் முதல் ஒராசிரியனிடம் கேட்டுக் கற்றுக் கொண்டான் அதன் பின் அதனைப் பிற சான்றோரிடமும் கேட்டான்.இருவகைக் கேள்வியினாலும் அவிவிலக்கியத்தைப் பிறர்பால் கேட்ட அவன் அதனைத் தானே படித்து அதன்வழி நின்றான். அதன் வழி நின்றதன் பயனாக அவ்விலக்கியத்தில் அறியப்படாதது ஒன்றில்லை யாக எல்லாவற்றையும் உணர்ந்து ஒத்து ஒழுகுகிறான். ஓரிலக்கியத்தைக் கற்கத் தொடங்கிய ஒருவர்க்கு இந்த நான்கு நிலையும் கைவந்த பின்னரே அவரை அவ்விலக் கியத்தில் புலமை உடையவராகக் கருத வேண்டும். ஒரு சில ஒவ்வொன்றில் முழுப்புலமை எய்தியபின்காரணமாக _அவரைப் பெரியபுராணம் வருகின்றது. கம்பராமாயணம் வருகின்றது. தொல்காப்பியம் வருகின்றது, நன்னூல் வருகின்றது என்று உலகமக்கள் கூறுகின்றனர். 17