பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 சொல்ல அதனைச் செவி வாயாக நெஞ்சு களனாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத்தமைத்தலாகும். எனவே கற்றல் என்பதும் கேள்வியே ஆகின்றது. அங்ங்னமாயின், கேள்வி என்றால் என்ன? கல்விக்கும் கேள்விக்கும் வேறு பாடென்ன என்றவினா எழுகின்றது. கல்விக்கும் கேள்விக்கும் வேறுபாடு ஒருவன் மாணவ நிலையிலிருந்து, தொடக்க நிலையில், ஆசிரியன் ஒருவனிடம் முறையாகப் பாடம் கேட்டுப் பயில்வது கல்வியாகும். கற்றபின், கற்றவற்றில் தெளிவு வருதற்காகவும், கல்லாதனவற்றைத் தெரிந்து தெளிவு வருதற் காகவும், தெரிந்து கொள்ள வேண்டியும், கற்று வல்ல சான்றோர் பலரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்டு நீங்கப் பெறுவது கேள்வியாகும். EI E BiBiH - E BI BI LE HI HI HA கணக்கினை முற்றப் பகலும் முனியா தினிதோதிக் கற்றலின் கேள்வியே நன்று என்று பழமொழிப்பாடல் கணக்கினை பகல் முற்றிலும் முனியாது இனிது ஒதுதலைக் கற்றலாகவும், அஃங்னமின்றி வேண்டிய பொழுது வேண்டிய பொருளைச் சான்றோர்பால் கேட்டலைக் கேள்வி என்றும் வேறுபடுத்தி ஒதுதலைக் காண்க. கேள்வி என்பது கற்றலுக்கும், கேள்விக்கும் வேறுபாடிருப்பினும், ஊன்றிக் கருதும்பொழுது, ஆசிரியனொருவன் சொல்லக் கேட்டுக் கற்பதும் கேள்வியே யாகும்; இதன்பின் சான்றோர் பாற் சென்று கேட்பதும் கேள்வியே யாகும்; இவ்விரண்டிற்கு மேல், கற்று, கேட்டு, கற்ற வழியிலே கேட்ட வழியிலே நிற்றலும் கேள்வியால் விளைந்ததாதலால், அதனையும் கேள்வி என்றே கொள்ள வேண்டும். இதற்குமேல், கற்றுக் கேட்டு, அறிந்து பொருள் வழிநின்று, அப்பொருளாகவே ஆகிவிடும் நான்காம் நிலையை எய்துவதும் கேள்வியால் விளைந்ததாதலால் அப்பொருளாக ஆகும் ஒத்தலையும் கேள்வி என்றே கொள்ளவேண்டும் எனவே கேள்வி