பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 பாப் விரையாமல் எடுத்துக் கொண்ட நூலினைக் கற்பின் அவர்க்கு அந்நூலில் விளங்காதது ஒன்றுமில்லை என்க. நன்னூலாசிரியரும் உணர்த்துகின்ற ஆசிரியனுக்கு "விரை ான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து" என்பதனைக் கூறி ாலும் உபலக்கணத்தால் உணர்பவர்க்கும் அவ்விலக்கணம் வேண்டும் என்க. (6) வருவதில் கருத்தினை மட்டுப் படுத்தி வந்ததிற் சிந்தையைச் சிந்தா திறக்குக எல்லார்க்கும் கற்றதைக் கருதாமல் இனிமேல் கற்பதில் நான் கருத்து இறங்கும். அது நன்மை யன்று ஏன் எனில்?! அரிது பெற்றிடினும் பெற்றதில் விருப்பம் அறப் பெறாதது எளிதாயிருப்பினும் அதனையே விரும்புதல் பொதுமக்களின் |யல்பாகும். கற்கின்ற ஒருவன் அவ்வியல்பினைப் பெறின், கற்ற அரிய நூலில் உண்டாகும் பலமுறைப் பயறலால் தோன்றும் தெளிவை இழந்துவிடுவான்; ஆதலால் கற்பவன் வருவதில் கருத்தினை மட்டுப்படுத்தி, வந்ததில் சிந்தையைச் ரிந்தாது சிறக்க வேண்டும். (7) நூலினை மீளவும் நோக்க வேண்டா சூத்திரம் பல்காற் பார்க்கவே துணிக விலர் ஒரு நூல் முழுவதையும் ஒரு முறையின்றி, இரண்டு முறை, மூன்று முறை, நான்கு முறை என்று கணக்கு வைத்துக் கொண்டு படிப்பார்கள். அவ்வாறு படிக்காமல் படிக்கத் தொடங்கிய ஒரே முறையிலேயே ஒவ்வொரு நாற்பாவையும் அல்லது ஒவ்வொரு பாடலையும் நன்கு ஆராய்ந்து, ஐயப்பொருளையும் திரிபுப் பொருளையும் நீக்கிவிட்டு, உண்மைப் பொருளை உணர்ந்து இவ்வாறு வரம்பு செய்து கொண்டு படிப்பின், அந்நூலை ஒருமுறை படித்தாலே போதும். 1. "அரிதுபெற் றிடினும் பெற்றதில் விருப்பம் அறம் பெறாதன விரும்புயிர்கள்" (வைராக்கிய தீபம் - சாந்தலிங்க அடிகள்)