பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 (8) மாரிபோற் கொடுப்பினும் மந்தனை விட்டுக் கூரிய னுடவே கொடுத்தும் பழகுக ஒருவன் கற்கும் பொழுது உடன்பயிலும் மாணவருடன் பயிலவேண்டும் என்பது விதி, ஆனால், அவருள் மந்தரும் இருப்பர், கூர்த்த மதியினரும் இருப்பர். அம் மந்தர் மழை போல் கைம்மாறு கருதாமல் கொடுப்பினும் அக்கொடை யைக் கருதாமல் அவருடன் பயில்வதை விடவேண்டும். கூர்த்த மதியினையுடைய மாணவருடன் இன்சொற் சொல்லியும், பணிந்தும், உற்றுழி உதவியும் கூடிப்பழகின் கல்வி அறிவு பெருகும். (9) வேறொரு கருமத் தினைமனத் தெண்ணின் ஆரிய னாயினும் அப்பொழு தொழி கற்கும் பொழுது பசி துன்பம் வரின், கல்விமேல் கருத்துச் செல்லாதாகலின், கற்பிக்கும் ஆசிரியனாயினும், கற்கும் மாணவனாயினும் கற்றலை அப்பொழுது நிறுத்தி விட்டுச் சோறு முதலியவற்றை உண்டல் முதலியன செய்து அவை தீர்ந்தபின் கற்க பசி முதலியன உள்ள பொழுது அவ்வுடல் துன்பால் கற்றலில் கருத்துச் செல்லா தென்க. (10) சொற்பயில் விப்பவன் எப்படிச் சொற்றனன் அப்படி ஒழுகி அரும்பொருள் பெறுக கற்பதற்குப் பிணியும் வறுமையும் இன்றி, இளமையும் பொருளும் இருத்தல் வேண்டும். இவையெல்லாம் கற்பதற்குச் சிறந்த கருவியாயினும் கற்பிக்கும் ஆசான் எவ்வாறு கூறி னானோ அவ்வாறு ஒழுகி செல்வப்பொருளைக் காட்டிலும் சிறந்த அரும் பொருளாகிய கல்வியை உறுபொருளாக ஒருவன் அடைய வேண்டும். இவ்வாறு கல்வி பயிலும் முறையை வகுத்தோதி யுள்ளார் இலக்கணக் கொத்து செய்த சுவாமிநாத தேசிகர் &Tost TLMTT.