பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7ア பயன் (செய்யுள் உறுப்பு) தோற்றுவாய் ஒருவன் எண்ணுவதாயினும் சொல்லுதாயினும் செய்வ தாயினும் பயனுடைய வற்றையே எண்ணுக பயனுடைய வற்றையே சொல்லுக: பயனுடையவற்றையே செய்க என்பது சான்றோர் விதி. இப்பயன் தனக்குப் பயனென்றும் பிறர்க்குப் பயனென்றும் இருவகையாக இருக்கும். தனக்குப் பயன்பட வாழ்வதைக் காட்டிலும் பிறர்க்குப் பயன்படும் செயல்களை எண்ணி, மொழிந்து, செய்து வாழ்வது பேரறம் என்பது அாண்' றோர் கருத்தாகும். பயன் என்பது, பயன்தரும் பொருளை உணர்த்திப் பெயர்ச்சொல்லாகவும், (பயன்றிகழ் வைப்பின் பிறர் அகன்றலை நாடு - புறநானூறு -7) பயத்தல், பயக்கும், பயந்த, பயந்து என்று பல்நெறிய வினைகளை உணர்த்தி வினைச்சொல்லாகவும் வழங்கி வருகின்ற நல்ல தமிழ்ச் சொல்லாகும். பயனில சொல்லாமை திருவள்ளுவர் பயனில சொல்லாமை என்ற அதி காரத்தை எண்ணுதலுக்கும் செய்தலுக்கும் நடுவாய் விளங்கு மாறு சொல்லில் வைத்து உணர்த்தியுள்ளார்.அவ்வதிகாரத்தில் வlத குறள் ஒன்று. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் என்பதாகும். "மயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவினையுடைவர், பயன்நீங்கிய சொல்லை மறந்தும் சொல்லார்" என்று அக்குறள் கூறுகின்றது. இது பயனைப் பொருள் என்று சொல்லுகின்றது. மயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவினை யுடையோர் பயனுடைய சொற்களையே சொல்லுவர்; இதனை எதிர்மறுத்தால் மயங்கிய அறிவுடையவரும் குற்றமற்ற