பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 258 அறிவினையுடையவருமாகிய மக்கள் பயனில்லாதவற்றைத் தான் எண்ணுவார். பயனில்லாதவற்றைத்தான் பேசுவார் பயனில்லாதவற்றைத்தான் செய்வார் என்றதாயிற்று. எனவே, பயினுடையவற்றை எண்ண, பேச, செய்ய, ஒருவற்கு மயக்கமற்றதாகிய, குற்றமற்றதாகிய நல்லறிவு வேண்டும் என்க. சிறப்புப்பாயிர உறுப்புள் பயன் என்பதும் ஒனறு இலக்கண நூல்களுக்குக் கூறப்படும் சிறப்புப்பாயிரம் பதினொரு உறுப்புக்களைப் பெற்று வரும். அப்பதி னொன்றில் ஒன்று பயன் என்பது."வடவேங்கடம் தென்குமரி, என்ற தொடக்கத்தையுடைய பாடல் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரமாகும். அப்பாயிரத்துள் எழுத்தும் சொல் லும் பொருளும் நாடி என்பது பயன் என்று உரையாசிரியர் கூறுவர். எனவே தொல்காப்பியங் கற்றலுக்குப் பயன் எழுத்திலக்கணத்தினையும் சொல்லிலக்கணத்தினையும் பொருளிலக்கணத்தினையும் ஆராய்தலாம்.அதனைப் போல நன்னூலைக் கற்பவர்க்குப் பயன் மொழித் திறத்தின் முட்டறுத்தல் என்று கூறப்படுகிறது. சிவஞான முனிவர் அந்நூல் உரையுள் பயனுக்குப் பயன் என்று ஒன்றைக் கூறி எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தால் மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதனுாற் பொருளுணர்ந்து கட்டறுத்து வீடு பெறும். என்பர். களவியலுரையாசிரியர் கூறும் பயன் இறையனார் களவியல் உரையாசிரியர் அந்நூற்குப் பாயிரம் உரைக்கும் பொழுது, பயனைக் கருதி இது கற்க நாற்பொருளும் பயக்கும் என்பது என்று கூறி இனி இக்களவியல் புகழ், பொருள், நட்பு, அறன் என்னும் நான்கினையும் பயக்கும், இதுவல்லனாக, என்னை? கற்று வல்லன் என்பதனின் மிக்க புகழ் இல்லை, உலகத்தாரானும் சமயத்தாரானும் ஒருங்கு புகழப்படுமாகலான் என்பது, இனிப் பொருளும் பயக்கும் என்னை? பொருளுடையாரும்