பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 பொருள் கொடுத்துக் கற்பராகலினென்பது, இனி நட்பும் பயக்கும் என்னை? கற்றாரைச் சார்ந்து ஒழுகவே எமக்கும் அறிவு பெருகும் என்று பலரும் சார்ந்து ஒழுகலின் என்பது. இனி அறனும் பயக்கும்.என்னை? ஞானத்தின் மிக்க கொடையின்மையான் என்பது. இது பயன், என்பர், இவ்வுரையாசிரியர் களவியல் கற்றால் பொருளிலக்கண அறிவைப் பெறுவது பயன் என்று கூறாமல், பொதுவாகக் கற்றோர்க்கு உண்டாகும் பயனையே களவியல் நூலுக்குப் பயன் என்று கூறுகிறார். நாற்பயன் நன்னூலாசிரியர் பொதுப்பாயிரத்தில் நூலின் இலக் கணத்தினைக் கூறும் பொழுது நாற்பொருட் பயத்தோடு _று தொகைச் சூத்திரத்திலே ஓதிப் பின்னர் விரிச் குத்திரத்தே அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற் பயனே' என்று கூறியுள்ளார். யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரும் நூலாவது 'மூவகைத்தாய், மூவரின் நடைபெற்று நால்வகைப் பயத்ததாய் என்று கூறி, நால்வகைப் பயனாவன அறம் பொருள் இன்பம் விடு என்பன என்பர் (யாப்பருங்கல விருத்தியுரை - கழகப்பதிப்பு - பக். 425, 426). விoசோமியம் வீரசோழியம் என்ற இலக்கண நூல் அறம் பொருள் முதலானவற்றை நூற்பயன் என்று கூறாமல், செய்யுட்பயன் என்று கூறுகின்றது. ... ... ... ... செய்யுளின் பயனே அறம் பொருள் இன்ப மொடுவி டெனவறி ஆரணங்கே (III) என்னும் காரிகையை நோக்குக. தொல்காப்பியர் கூறுவது தொல்காப்பியர் செய்யுளியலில் செய்யுட்குக் கூறிய பலவகை உறுப்புள் 'பா' என்னும் உறுப்பினை,