பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 என்பது பயன் இன்னதென்பதைக் கூற வந்ததாகும். இப்படிச் சொல்லுவதால் இன்ன பயன் விளையும் என் பதைக் கருதிக் கொண்டு அப்பயன் விளைதற்குக் காரண மான சொற்களை யெல்லாம் தொகுத்துச் சொல்வதே பயன் என்னும் உறுப்பு என்கின்றார். எடுத்துக்காட்டாக சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வாரல் வரினே யானஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே என்னும் பாட்டினை எடுத்துக் கொள்வோம். இப்பாட்டுடைத் தலைவியோ தோழியோ வரைவு கடாவுதற் குறிப்பாய்க் கூறுகின்றனர். தலைவனைப் பார்த்து வரைந்து கொள் என்று கூறாமல் அக்கருத்தை உண்டாக்குகின்ற சொற்களை யெல்லாம் தொகுத்துக் கூறியுள்ளனர். சாரல் நாடனே! நீ வரும் வழி ஏதமுடைத்து. என் ஏதமென்னின்? வரும் வழியில் சிறு காட்டாறு உண்டு. அது நடப்போர் தம் காலைப் பின்னிக் கொள்ளும் சூரல் பம்பியது; மேலும் சூார மகளிர் ஆர் அணங்கினராய் அவ்வழியில் இயங்கு கின்றனர்; அக்காரணத்தால் அவ்வழியில் வராதே, நீ வரின் உனக்கு என்ன ஏதம் உண்டாகுமோ என்று நான் அஞ்சுகின்றேன்" என்று கூறுகின்றனர். இப்படிக் கூறுவதனால் இவ்வாறு வருதலைவிட்டு வரைந்து கொள் என்பது தானே பயனாக உள்ளது. பேராசிரியரும், மாறாக காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே என்னும் பாட்டு தோழியைத் துரது விடுவாளாதற் பயன் I-II வந்தது. இவ்வாறு எல்லாப் பாட்டும் பயன் உறுப்பாகவன்றி வாரா என்க. இவை புறத்திற்கும் ஒக்கும் என்பர். உலக வழக்குச் செய்யுள் வழக்கு என்னும்இரண்டில் உலக வழக்கிலேயே பயன்தரும் சொற்களைத்தான் கூறவேண்டும், பயன்தராத சொற்களைக் கூறக்கூடாது என்று திருவள்ளுவர்,