பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல் (200) என்னும் குறளால் கூறுவாரேயானால், தெரிந்து மொழிச் செய்தி என்று கூறப்படும் செய்யுளிடத்தே பயன் தராத சொற்களை வைத்து வழங்கலாமோ? இலக்கண நூலுள் வரத்தகாதென்ற குற்றங்களுள் பொருளில மொழிதல் என்பதும் ஒன்றாகும். பொருள் இல மொழிதல் என்பது பயனில்லாத சொற்களைக் கூறுதலாம். எனவே இலக்கியச் செய்யுளுள்ளும் இலக்கணச் செய்யுளுள்ளும் பயன்தரும் சொற்களையே கூறுதல் வேண்டும் என்னும் கருத்தால் தொல்காப்பியர் செய்யுளுக்கு உறுப்பாகப் பயனையும் குற்றங்களுள் ஒன்றாகப் பொருளில மொழிதலையும் கூறி யுள்ளார். எனவே இன்னசொல் சொன்னால் இன்ன பயன் விளையும் என்று முன்னரே கருதிக் கொண்டு அப்பயன் தோன்றுவதற்கும் வேண்டிய வகையில் அமைந்த சொற்களைக் கூறுதல் என்னும் செய்யுளுறுப்பாகும். இவ் :வாறு கூறுவதற்கு முன்னுணர்வும் நுண்ணுர்வும் வேண்டும்.