பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காவிய உலகில் - அகவற்பா ஒரு புலவனது காவியத்தைப் பற்றிய உண்மைகளை அறிய வேண்டுமாயின் அக்காவியம் எழுந்தபோது நிலவிய காலச்சூழ்நிலையை ஆராய்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் எழுந்த பாடல்கள் பலவும் அகவற்பாக்களாலேயே ஆக்கப்பட்டன. அகவற்பா உச்ச நிலை பெற்றிருந்த காலம் அது. இக்காலச் சூழ்நிலையில் இரண்டு முக்கிய உண்மைகளை நாம் அறிதல் வேண்டும். ஒன்று: புலவர்கள் பலரும் தம் பாடல் ளை அகவற் பாக்களால் அமைப்பதையே சிறந்ததாகக் கருதினர். இரண்டு: தொடர்நிலைச் செய்யுள்கள் அக் ாலத்தில் ஏற்றம் பெறவில்லை; தனிச் செய்யுள்களே பாடப் பெற்று வந்தன. பின்னர், அவை ஆய்ந்து சான்றோர்களால் தொகுக்கப்பட்டுத் தொகை நூல்களாயின. தொடர்நிலைச் செய்யுளின் தொடக்கம் பத்துப் பாட்டில் காணப்படுகிறது. அகத்துறைப் பாடல்கள் பலவும் ஒவ்வொரு துறை பற்றியே எழுதப்பட்டு வந்த நிலையில் ஒரு மாற்றம் தோன்றத் தொடங்கியது. தலைவன் தலைவி யாது களவொழுக்க நிகழ்ச்சிகளைக் கோவையாகத் தொகுத்து, பண்டை அடிச்சுவடு மாறாமல் அகவற்பாவில் முதன்முதலாக அளித்திருக்கும் முயற்சியில் தோன்றியது குறிஞ்சிப்பாட்டு. தொடர்நிலைச் செய்யுளின் துவக்கக் காஸ்கோள் விழாவை இங்குக் காணலாம். இதனை அடியொற்றியே சங்க காலத்தை அடுத்துச் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இயற்றப்பட்டன. அக்காலத்தெழுந்த தொடர்நிலைச் செய்யுட்கள் பல. அகவற்பாவில் எழுதப் ப_ன. பெருநூலாகிய மாபாரதத்தை அகவற்பாவில் தமிழில் ஆக்கியமைத்துள்ள முயற்சியைக் காணலாம். சிலப்பதிகார காலத்திற்குப் பின்னர்த் தோன்றிய நூல் களில் மணிமேகலையும் பெருங்கதையும் குறிப்பிடத்தக்கவை.

  • =